திருமணத்தின் போது முக்கிய சடங்கு செய்ய மறுத்த மணப்பெண்: குவியும் பாராட்டுக்கள்!

Report Print Vijay Amburore in இந்தியா

மேற்கு வங்க மாநிலத்தில் முக்கிமான திருமண சடங்கிற்கு மறுப்பு தெரிவித்த மணப்பெண்ணை பலரும் பாராட்டி வருகின்றனர்.

மேற்கு வங்க மாநிலத்தில் திருமணத்தின் போது "Kanakanjali" என்கிற சடங்கானது பின்பற்றபடுகிறது.

இந்த சடங்கு நிறைவேறாமல் எந்த திருமணமும் நடந்து முடியாது. அங்கு இந்த சடங்கு முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

திருமணம் முடிந்த கையோடு, மணப்பெண்ணின் கைகளில் அரிசியை கொடுத்து பின்புறமாக தூவ சொல்வார்கள். அப்படி தூவிவிட்டால், அவளுக்கும், பெற்றோர் வீட்டிற்கும் இருந்த தொடர்பு முறிந்துவிட்டது.

அதன்பிறகு அவளுடைய வாழ்க்கை கணவனுடன் துவங்க உள்ளது என்பதே அதன் அர்த்தமாகும்.

இந்த சடங்கிற்கு தான் மணப்பெண் ஒருவர் மறுப்பு தெரிவித்துள்ளார். கோடி புண்ணியம் செய்தலும் பெற்றார் வளர்த்த கடனை ஈடு செய்ய முடியாது என கூறியுள்ளார்.

மேலும், அந்த சடங்கிற்கு பதிலாக, நான் அடிக்கடி என்னுடைய பெற்றோரின் வீட்டிற்கு வந்து சந்திப்பேன் என சபதம் எடுத்துள்ளார்.

அந்த பெண்ணிற்கு தற்போது சமுகவலைத்தளங்களில் இருந்து பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...