மணமகனை பார்த்து ஆச்சரியத்தில் வாய்பிளந்த உறவினர்கள்: வைரலாகும் வீடியோ

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் திருமணத்துக்கு மணமகன் ரோட் ரோலர் வாகனத்தில் வந்ததை பார்த்த நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஆச்சரியத்தில் வாய்பிளந்தார்கள்.

மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் அர்கா பாட்ரா (30). இவருக்கும் அருந்ததி என்ற பெண்ணுக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது.

திருமணம் நடக்கும் இடத்துக்கு பொதுவாக மணமகன் குதிரையில் வருவார் அல்லது காரில் வருவார்.

ஆனால் பாட்ரா ரோட் ரோலர் வாகனத்தில் வந்தார். இதை பார்த்து அங்கிருந்த உறவினர்களும், நண்பர்களும் வாய்பிளந்தார்கள்.

ரோட் ரோலர் வாகனம் முழுவதும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

இது குறித்து பாட்ரா கூறுகையில், என் திருமணத்தை எப்போதும் மறக்க முடியாத வகையில் நடத்தவேண்டும் என எண்ணினேன்.

இதுவரை எனக்கு தெரிந்து மணமகன் யாரும் ரோட் ரோலரில் வந்திருக்க மாட்டார்கள். இது குறித்து முதலிலேயே என் மனைவியிடம் கூறிவிட்டேன்.

இதோடு சுற்றுசூழலை பாதுகாக்க வேண்டும் என்பது என் எண்ணம், அதனால் தான் திருமண நிகழ்வில் சத்தமாக ஒலிக்கும் பாடல்களை போடவில்லை. அதற்கு பதிலாக மென்மையான புல்லாங்குழல் இசையை ஒலிப்பரப்பினோம் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers