பட்ஜெட் 2019: முக்கிய அம்சங்கள்! வருமான வரி அதிரடி சலுகைகள் அறிவிப்பு

Report Print Kabilan in இந்தியா

2019-20 நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை இடைக்கால நிதியமைச்சர் பியூஷ் கோயல் மக்களவையில் இன்று தாக்கல் செய்தார்.

இந்த அரசின் பதவிக்காலம் மே மாதத்துடன் முடிவடைவதால் முழு பட்ஜெட்டாக அல்லாமல் செலவினங்களுக்கான ஒப்புதல் பெறும் இடைக்கால பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்படுகிறது.

பாஜக தலைமையிலான மத்திய அரசின் கடைசி பட்ஜெட் இதுவாகும்.

வருமான வரி அதிரடி சலுகைகள் அறிவிப்பு

வருமான வரி உச்ச வரம்பு சலுகை 2.5 லட்சத்தில் இருந்து ரூ. 5 லட்சமாக உயர்வு

நிரந்தர கழிவு 40 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரமாக உயர்வு

ஒட்டுமொத்த வருமான வரிசலுகையால் 6.25 லட்சம் வரையில் இனி வருமான வரி கட்ட வேண்டிய தேவையில்லை.

இரண்டு வீடுகளுக்கு இனி வீட்டுக்கடன் சலுகை வழங்கப்படும்

வங்கி வட்டியில் இருந்து வருமானத்துக்கு தனியாக 50 ஆயிரம் ரூபாய் விலக்கு அளிக்கப்படும்

2வது வீடு வாங்குபவர்களுக்கும் வருமான வரியில் சலுகை

மார்ச் மாதத்துக்குள் அனைத்து வீடுகளுக்கும் மின் வசதி

வரும் மார்ச் மாதத்துக்குள் நாடுமுழுவதும் அனைத்து வீடுகளுக்கும் சவுபாக்கியா திட்டத்தின் கீழ் மின் வசதி செய்து தரப்படும் என்று நிதி அமைச்சர் பியூஷ் கோயல் இடைக்கால பட்ஜெட்டில் அறிவித்தார்.

பெண்களுக்கான திட்டம்

பெண்களுக்கு பிரசவ விடுப்பு 26 வாரங்கள்

பணிபுரியும் பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு 26 வாரங்கள்

ராணுவத்தில் பணிபுரிபவர்களுக்கு

ராணுவத்துக்கு 3 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்

ராணுவத்தில் ஒரே பணி ஒரே ஓய்வூதியம் திட்டத்தை செயல்படுத்தியுள்ளோம். இதற்காக 40 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தினமும் 27 கிலோ மீட்டர் தொலைவுக்கு நெடுஞ்சாலைகள் அமைக்கப்படுகின்றன

இந்தியாவில் மொபைல் டேட்டா பயன்பாடு 15 மடங்கு அதிகரித்துள்ளது.

ஆளில்லா லெவல் கிராசிங் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது

புதிய பென்ஷன் திட்டம்

மாதம் ரூ.3000: அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு புதிய பென்ஷன் திட்டம் அறிமுகம்

நாட்டில் உள்ள அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள கோடிக்கணக்கான தொழிலாளர்களுக்காக புதியபென்ஷன் திட்டம் 2019-20 இடைக்கால பட்ஜெட்டில் மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய அரசில் மீன்வளத்துறை

மீனவர்களின் நலனுக்காக மீன்வளத்துறை உருவாக்கப்படும்

கால்நடை மற்றும் மீன் வளர்ப்பில் ஈடுபடும் விவசாயிகளுக்கு கடனில் 2 சதவித வட்டி தள்ளுபடி வழங்கப்படும்

கால்நடை வளர்ப்பு, மீனவர் நலனுக்கு ரூ.750 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

பால் உற்பத்தியை அதிகரிக்க காதமதேனு என்ற சிறப்பு திட்டம் அறிமுகம் செய்யப்படும்

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச மாத ஓய்வூதியமாக ரூ. 3 ஆயிரம் வழங்கப்படும்

புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் 12 கோடி பேர் பயன் பெறுவர்

பிஎப் சந்தாதாரர்கள் உயிரிழந்தால் வழங்கப்படும் நிவாரண நிதி ரூ. 6 லட்சமாக உயர்வு

கடனை உரிய நேரத்தில் கட்டினால் 3 சதவீத வட்டி சலுகை வழங்கப்படும்

மேலும் 8 கோடி இலவச சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்படும்

விவசாயிகளுக்கு ரூ. 6,000 நிதியுதவி

2 ஹெக்டேர் வரை நிலம் வைத்துள்ள குறு விவசாயிகளுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்.

மூன்று தவணையாக வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.

விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கும் திட்டத்துக்கு 75 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு

கிசான் கார்டு வைத்திருக்கும் விவசாயிகளுக்கு வட்டி மானியம் இரட்டிப்பாக்கப்படும்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers