வெளிநாட்டில் வேலை செய்வதாக கூறிய கணவர்... திருமணத்துக்கு பின்னர் இளம் மனைவிக்கு நேர்ந்த கதி

Report Print Raju Raju in இந்தியா

வெளிநாட்டில் வேலை செய்வதாக ஏமாற்றி திருமணம் செய்து பணத்திற்காக கொலை செய்ய முயற்சிப்பதாக கணவன் வீட்டார் மீது இளம்பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த வினோத்குமார் என்பவர் நியூசிலாந்தில் பணியாற்றுவதாகக் கூறி பூந்தமல்லியைச் சேர்ந்த ஜனனி என்பவரை கடந்த ஆண்டு திருமணம் செய்தார்.

ஜனனிக்கு வரதட்சணையாக 51 சவரன் நகைகள் கொடுக்கப்பட்டன. இந்நிலையில் வினோத் நியூஸிலாந்தில் வேலை செய்வதாகக் கூறியது பொய் எனவும், அவரும், அவரது குடும்பத்தினரும் பணம், நகை கேட்டு துன்புறுத்தியதாகவும் ஜனனி தற்போது பொலிசில் புகார் தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த வாரம் கணவர் குடும்பத்தினர் தனது கை, கால்களை பிடித்துக் கொள்ள வினோத் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயற்சி செய்தாகவும் அங்கிருந்து தப்பி வந்ததாகவும் ஜனனி கண்ணீருடன் கூறியுள்ளார்.

இதுகுறித்து பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers