புது காதலியின் வரவால் அவளுடனான திருமண வாழ்க்கை கசந்தது: குழந்தை கண்முன்னே கொலைகாரனாகிய ஆண்

Report Print Deepthi Deepthi in இந்தியா

மும்பையில் மனைவியுடனான திருமண வாழ்க்கை கசந்த காரணத்தால் காதலிக்காக தனது மனைவி மற்றும் குழந்தையை கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சையதா மற்றும் அவரது 3 வயது மகள் ஆலியா ஆகிய இருவரும் அவர்களது குடியிருப்பில் தொண்டை அறுக்கப்பட்டு இறந்துகிடந்தனர்.

வெகு நேரமாகியும் கதவு திறக்கப்படாத காரணத்தால் அருகில் இருப்பவர்கள் பொலிசிற்கு தகவல் தெரிவித்ததையடுத்து, வீட்டிற்கு வந்த பொலிசார் உள்ளே இருவரும் இறந்துகிடந்ததை பார்த்து பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சிசிடிவி கமரொவில் ஆய்வு செய்ததில், கணவர் இலியாஸ் பர்கா அணிந்துகொண்டு தனது வீட்டுக்கு வந்து சென்றது தெரியவந்தது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், எங்கள் இருவருக்கும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடந்தது.

காலப்போக்கில் என்னுடன் பணியாற்றிய பானு என்ற பெண்ணுடன் காதல் மலர்ந்தது. புது காதலியால் எனது மனைவியடான திருமண வாழ்க்கை கசந்தது. இதனால், எனது மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்தேன், இதனை எனது 3 வயது மகள் பார்த்துவிட்டாள். அவள் இந்த கொலைக்கு சாட்சியாகிவிடக்கூடாது என்பதற்காக அவளையும் கொலை செய்தேன் என கூறியுள்ளார்.

இந்த கொலை குற்றத்திற்காக இலியாஸ் மற்றும் பானு ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்