உறவுக்கார பெண்ணுடன் தொடர்பு... மனைவி, மகளை எரித்து கொன்ற கணவன்.. திடுக்கிடும் பின்னணி

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் உறவினருடன் ஏற்பட்ட கள்ளக்காதலால் மனைவி மற்றும் மகளை கொலை செய்த கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையை சேர்ந்தவர் இலியாஸ் சயித் ஹுசைன் (35) இவர் மனைவி தியிசீன் ஹுசைன் (32). தம்பதிக்கு அலியா (2) உள்ளிட்ட இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் தியிசீனும் குழந்தை அலியாவும் உடல் கருகிய நிலையில் வீட்டு சமையலறையில் சடலமாக கிடந்தனர்.

சம்பவம் குறித்து பொலிசார் விசாரித்த வந்த நிலையில் மனைவி மற்றும் குழந்தையை இலியாஸ் தான் கொலை செய்தார் என தெரியவந்துள்ளது.

அதாவது, இலியாஸுக்கும் அவரின் உறவினர் அப்ரீன் ஹுசைன் (22) என்ற பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.

இதையறிந்த தியிசீன், கணவருடன் சண்டை போட்டுள்ளார்.இதையடுத்து மனைவியிடம் விவாகரத்து கேட்டார் கணவர் இலியாஸ்.

ஆனால் தனது இரண்டு பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அதற்கு தியிசீன் மறுப்பு தெரிவித்தார்.

இதையடுத்து ஆத்திரமடைந்த இலியாஸ் மனைவி மற்றும் குழந்தை அலியாவின் கழுத்தை நெரித்துவிட்டு பின்னர் எரித்து கொலை செய்தது தெரியவந்துள்ளது.

இதை தொடர்ந்து இலியாஸ் மற்றும் அவரின் கள்ளக்காதலி அப்ரீனை பொலிசார் கைது செய்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்