ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யாவுக்கு 8 நாளில் மறுமணம்! காவல் நிலையத்துக்கு சென்ற தாய் லதா

Report Print Raju Raju in இந்தியா

ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா திருமணத்தில் பிரபலங்கள் பலரும் பங்கேற்க உள்ளதால் பாதுகாப்பு வழங்கும்படி லதா ரஜினிகாந்த் காவல் நிலையத்துக்கு சென்று மனு அளித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சவுந்தர்யாவின் முதல் திருமணம் பிரிவில் முடிந்த காரணத்தால் மறுமணம் செய்ய முடிவு செய்தார்

சவுந்தர்யாவுக்கும், நடிகரும் தொழிலதிபருமான விசாகனுக்கும் காதல் ஏற்பட்டது. இரு வீட்டாரும் இந்த திருமணத்துக்கு சம்மதித்ததால் திருமண ஏற்பாடுகள் தொடங்கின.

10,11-ந் திகதிகளில் ரஜினியின் போயஸ் கார்டன் இல்லத்தில் திருமணம் நடக்கிறது. திருமண விழாவில் நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் திரை பிரபலங்கள் பங்கேற்க உள்ளனர்.

திருமணத்திற்கு இன்னும் 8 நாட்களே உள்ள நிலையில் ரஜினிகாந்த் மனைவி லதா ரஜினிகாந்த் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் ஒரு மனு கொடுத்துள்ளார்.

அதில், வரும் 10-ந் திகதியன்று எங்களது மகள் சவுந்தர்யா திருமணம் போயஸ் கார்டன் வீட்டில் நடைபெற உள்ளதால் இந்த கல்யாண விழாவில் மிக முக்கிய பிரபலங்களான சினிமா நட்சத்திரங்கள், அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் பங்கேற்க உள்ளனர்.

எனவே அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்