அதிக லாபம்.. மக்களுக்கு நன்மை... வியக்க வைக்கும் இலங்கை தமிழர்கள்!

Report Print Raju Raju in இந்தியா

விண்வெளி ஆய்வில் ஈடுபடுவோருக்கான உணவாக பயன்படும் சுருள் பாசியை தமிழகத்தில் வாழும் இலங்கை தமிழர்கள் வளர்த்து அதிக லாபம் ஈட்டி வருகின்றனர்.

விண்வெளி ஆராய்ச்சியாளர்களின் பிரதான உணவான ஸ்பைருலினா எனப்படும் சுருள் பாசியில் ஏராளமான ஊட்டச்சத்துகள் உள்ளன.

சுருள்பாசி எனப்படுவது நேரடியாக கண்ணுக்குத் தெரியாத, நீலப்பச்சை நிறமுடைய நீரில் வாழும் நுண்ணிய தாவரமாகும்.

இதில் 55.65 விழுக்காடு புரதச்சத்து உள்ளதாகக் கூறப்படுகிறது.

இத்தகைய சுருள்பாசியை திருப்போரூர் அடுத்த நத்தம் பகுதியிலுள்ள இலங்கை அகதிகள் முகாமில் “ஈழ ஏதிலியர் மறு வாழ்வுக் கழகம்” சார்பில் வளர்த்து அதிக லாபம் ஈட்டி வருகின்றனர்.

முதலில் தங்கள் குழந்தைகளின் ஊட்ட உணவுக்காக உற்பத்தி செய்யத் தொடங்கியவர்கள், அதன்பிறகு அதனை லாபகரமான தொழிலாக மாற்றியுள்ளனர்.

சுருள்பாசி வளர்ப்புக்கான பயிற்சியை மதுரையைச் சேர்ந்த அறக்கட்டளை ஒன்றில் இருந்து பெற்றதாகக் கூறும் ரத்தின ராஜசிங்கம் என்பவர் தற்போது 18 தொட்டிகளில் அவற்றை வளர்த்து வருகிறார்.

தினமும் காலையில் எழுந்தவுடன் சுருள்பாசி பவுடரை இரண்டு கிராம் எடுத்து ஒரு டம்ளர் நீரில் சர்க்கரை, எலுமிச்சம்பழம் சேர்த்துக் குடித்தால் உடல் பலம் பெறும் என்று அவர்கள் கூறுகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers