கைக்குழந்தையுடன் தர்ணாவில் இறங்கிய பெண்! ஆண்மை இல்லாதவன் என திட்டியதாக கணவன் வேதனை

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் எட்டு மாத கை குழந்தையுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணின் குடும்பத்தார் என்னை ஆண்மை இல்லாதவன் என்று திட்டியதாக கணவன் கூறியுள்ளார்.

சென்னை நொளம்பூரில் கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி 8 மாதக் கைகுழந்தையுடன் இன்ஜினீயர் பிரணிதா தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அந்த பெண் எதற்காக போராட்டத்தில் இறங்கினார்? உண்மையில் என்ன நடந்தது என்பது குறித்து அந்த பெண்ணின் தந்தை பவலணனிடம் பிரபல தமிழ் ஊடகம் பேட்டி எடுத்துள்ளது.

அப்போது அவர் என்னுடைய மகள் பிரணிதாவுக்கும், தினேஷுக்கும் கடந்த 2009-ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.

இன்ஜினியரான என் மகள் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். 2009-ல் 5 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கினார்.

ஸ்கூலில் முதல் மதிப்பெண் எடுத்தவர். ஆனால் அவளின் வாழ்க்கை திருமணத்திற்கு பின் கேள்வி குறியாகிவிட்டது.

தினேஷ் இரண்டு முறை என்னுடைய மகளுக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பினார். அதன் பின் தனக்கு நேர்ந்த கொடுமைகளைகளை பிரணிதா காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த வழக்கு சென்று கொண்டிருந்த போது 2017-ஆம் ஆண்டு அவள் கர்ப்பமானதால், தினேஷ் விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றுவிட்டு, என் வீட்டில் விட்டுச் சென்றார்.

குழந்தை பிறந்த போதும் அவர் அழைக்க வராததால் வீட்டிற்கு சென்றோம். ஆனால் அவர்கள் எங்களை வீட்டிற்குள் விடவில்லை, இதன் காரணமாகவே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

மேலும் அவர் இன்ஜினியரிங் படித்ததாக கூறுகிறார். ஆனால் அவருக்கு அரியர்ஸ் இருக்கிறது. அவரின் அப்பா திமுக-வில் நல்ல நிலையில் இருப்பதால், பொலிசாரும் அவருக்கு சாதகமாக உள்ளனர். எங்களை இப்படி நயவஞ்சமாக ஏமாற்றிவிட்டனர் என்று வேதனையுடன் கூறியுள்ளார்.

இவர் இப்படி சொல்ல அதன் பின் தினேஷுடன் இது குறித்து கேட்ட போது, எனக்கும் பிரணிதாவுக்கும் திருமணம் நடந்த சில மாதங்களிலேயே தனிக்குடித்தனம் செல்ல வேண்டும் என்று பிரச்சனை செய்தார்.

அதுமட்டுமின்றி அடிக்கடி தாய் வீட்டிற்கு சென்றுவிடுவார். எங்கள் வீட்டிற்கு வருவார். அவள் இப்படியே நடந்து கொண்டதால், மனைவியுடன் சேர்த்து வைக்கும் படி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன்.

அதன் பின் சில மாதங்கள் என்னுடன் இருந்த அவள் மீண்டும் தனிக் குடித்தனம் செல்ல வேண்டும் என்று பிரச்சனை செய்து மீண்டும் அம்மாவின் வீட்டிற்கு சென்றுவிட்டாள்.

அவள் குடும்பத்தால் நான் நிறைய சங்கடங்களை சந்தித்துவிட்டேன்.திருமண முடிந்த நாளிலிருந்து இந்நாள் வரை என்னுடைய வாழ்க்கையே வழக்குகளில் ஆஜராகுவதிலேயே கடந்து செல்கிறது.

எனக்கு குழந்தை பிறந்த போது, நான் வளையல் எல்லாம் போட்டு அழகு பார்த்தேன், நான் தான் அவளை மருத்துவமனையில் கவனித்து வந்தேன்.

நீதிமன்றத்தில் நடந்த விவாகரத்து வழக்கை குழந்தைக்காகவும் பிரணிதாவுக்காகவும் வாபஸ் பெற்றேன். குழந்தை பிறந்தபிறகு பிரணிதாவின் வீட்டுக்கு ஆசையாக நான் சென்றபோது என்னை அவர்கள் அவமானப்படுத்தினார்கள்.

என்னையும் என் குடும்பத்தினரையும் தரக்குறைவாகப் பேசினார்கள். அது ஏன் என்னை ஆண்மை இல்லாதவன் என்று கூட திட்டினார்கள்.

அப்போது தான் அவர்கள் என் மீது வரதட்சனை வழக்கு தொடர்ந்தனர். முன் ஜாமீன் பெற்ற நான் அவரின் குடும்பத்தினரின் நடவடிக்கைகளால் பெரிதும் பாதிக்கப்பட்ட நான், மீண்டும் விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்தேன்.

அந்த வழக்கு நிலுவையில் இருக்கும் சமயத்தில் என்னையும் என் குடும்பத்தினரையும் அவமானப்படுத்தத்தான் கைக்குழந்தையுடன் வீட்டின் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்