தமிழகம் வந்த வெளிநாட்டு பெண்ணுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி: என்ன தெரியுமா?

Report Print Raju Raju in இந்தியா

ஐஸ்லாந்தில் இருந்து வந்த பெண்ணுக்கு தமிழகத்தின் கும்பகோணம் அருகே கொற்கையில் உள்ள பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் மணிவிழா நடைபெற்றது.

அமெரிக்கா, தென்ஆப்பிரிக்கா, ஐஸ்லாந்து, இத்தாலி, துபாய், கொரியா, ஜப்பான், அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளிலிருந்து 22 ஜோதிடர்கள் ஆன்மிக தலங்களில் சுற்றுலா மேற்கொள்வதற்காக தமிழகம் வந்தனர்.

அதன்படி, அவிட்டம் நட்சத்திரத்துக்குரிய கோயிலான, கும்பகோணம் அருகே கொற்கையில் உள்ள மூன்றாம் குலோத்துங்கச் சோழன் கட்டிய பிரம்மபுரீஸ்வரர் கோயிலுக்கு நேற்று வந்தனர்.

வெளிநாட்டினர் 22 பேரில் ஒருவரான ஐஸ்லாந்தைச் சேர்ந்த பெண்ணான, அனா என்கிற அன்னபூரணி என்பவருக்கு 60 வயது பூர்த்தியானதையடுத்து பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் நேற்று கணபதி ஹோமம், ஆயுஷ் ஹோமம், நவக்கிரக ஹோமம், நட்சத்திர ஹோமம், பஞ்சசூக்த ஹோமம், கோ பூஜை என 51 கலச பூஜையை 11 வேதவிற்பனர்களைக் கொண்டு நடத்தப்பட்டது.

இது குறித்து, நட்சத்திர திருத்தலங்களின் யாத்திரை குழுவை வழிநடத்தும் பார்த்திபன் கூறுகையில், நேற்றுடன் ஐஸ்லாந்து பெண் அனா என்கிற அன்னபூரணிக்கு 60 வயது பூர்த்தியானது தெரியவந்தது, இதையடுத்து அவருக்கு மணிவிழா நடைபெற்றது.

இதில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், உள்ளூர் கிராம மக்கள், பக்தர்கள் கலந்துகொண்டு வாழ்த்தினர் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...