நடுவானில் பயணிக்கு மாரடைப்பு: அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்.. பின்னர் நடந்த சோகம்

Report Print Raju Raju in இந்தியா

நடுவானில் பயணிக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்ட நிலையில் அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

பெங்களூரில் இருந்து டெல்லிக்கு ஏர் இந்தியா விமானம் ஒன்று நேற்று வந்து கொண்டிருந்தது.

அப்போது விமானத்தில் இருந்த ஜவகர் வாலி (60) என்ற பயணிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து விமானம் அவசரமாக மத்தியபிரதேசத்தின் போபாலில் உள்ள ராஜ போஜ் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

பின்னர் உடனடியாக ஜவகர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் ஏற்கனவே மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து விமானம் சிறிது தாமதமாக டெல்லிக்கு புறப்பட்டு சென்றது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers