சில நாட்களில் மகளுக்கு இரண்டாவது திருமணம்: உற்சாகமாக ரஜினிகாந்த் தொடங்கிய செயல்

Report Print Raju Raju in இந்தியா

தமிழக அரசியல் பிரபலங்களை சந்தித்து தனது மகள் திருமணத்துக்கான அழைப்பிதழை கொடுக்க துவங்கியுள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.

நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் செளந்தர்யா - விசாகன் திருமணம் வரும் 11-ஆம் திகதி போயஸ் கார்டனில் உள்ள அவர் வீட்டில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் அரசியல் தலைவர்களை சந்தித்து மகள் திருமண பத்திரிக்கையை கொடுக்க துவங்கியுள்ளார் ரஜினிகாந்த்.

அதன்படி தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் வீட்டுக்கு இன்று சென்ற ரஜினிகாந்த் அவரிடம் அழைப்பிதழை கொடுத்தார்.

அங்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் இருந்த நிலையில் அவருக்கும் மகள் திருமண அழைப்பிதழை ரஜினிகாந்த் வழங்கினார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...