சந்தியாவின் அழகை கெடுக்க அடிக்கடி இதை செய்வார்! தாயாரின் கண்ணீர் பேட்டி

Report Print Fathima Fathima in இந்தியா

சென்னை குப்பை கிடங்கில் இருந்து கால் பாகங்கள் மட்டும் கண்டெடுக்கப்பட்ட வழக்கில் பல திடுக்கிடும் திருப்பங்கள் தெரியவருகிறது.

சென்னை பெருங்குடி குப்பை கிடங்கில் இருந்து கடந்த 21ம் திகதி இளம்பெண்ணின் கை, கால்கள் மட்டும் கண்டெடுக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து பள்ளிக்கரணை பொலிசார் விசாரணையை தீவிரப்படுத்தியதில், இரண்டு வாரங்கள் கழித்து அந்த பெண் சந்தியா என்பதும், அவரது கணவர் பாலகிருஷ்ணனே குற்றவாளி என்பதும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் சந்தியாவின் தாயார் அளித்துள்ள பேட்டியில், எனது மகளுக்கு 16 வயதிலேயே திருமணம் நடந்தது, பெரியவர்கள் பார்த்து நடத்தி வைத்த திருமணம்.

கணவர் கொடுமைப்படுத்தியதை அவர் கூறியதே இல்லை, என் மகள் மீது எப்போதும் அவருக்கு சந்தேகம் தான்.

அவள் அழகை கெடுப்பதற்காக பலமுறை பச்சை குத்தியுள்ளார்.

சமீபத்தில் கிறிஸ்துமஸ்காக எங்கள் வீட்டுக்கு வந்த சந்தியா ரூ.75 ஆயிரத்தை வாங்கி கொண்டு வந்தார்.

கடந்த 19ம் திகதியிலிருந்து அவரிடமிருந்த எந்த அழைப்பும் இல்லை, நான் பாலகிருஷ்ணனுக்கு போன் செய்த போது சந்தியா வெளிநாடு சென்றுவிட்டதாக கூறினார்.

தூத்துக்குடி பொலிசார் எங்களை தொடர்பு கொண்ட போது தான் என் மகள் காணாமல் போன விபரம் தெரியவந்தது.

கை, கால்களில் இருந்த பச்சை குத்திய அடையாளத்தை கொண்டு பொலிசை தொடர்பு கொண்டோம் என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்