வேலையில்லாதது தான் அவமானம்.. துப்புரவுத் தொழில் அல்ல! விரக்தியில் விண்ணப்பித்த இளம் இன்ஜினியர்

Report Print Kabilan in இந்தியா

தமிழகத்தில் துப்புரவு பணியாளர் பணிக்கு நன்கு படித்த இளைஞர்கள் விண்ணப்பித்த நிலையில், இன்ஜினியர் மாணவரான தனசிங் என்பவர் வேலை கிடைக்காததாலேயே இந்த பணிக்கு விண்ணப்பித்ததாக தெரிவித்துள்ளார்.

கடந்த செப்டம்பர் மாதம், சென்னையில் உள்ள தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் துப்புரவுப் பணியாளர் பணிக்கு விண்ணப்பம் கோரப்பட்டது. ஆனால் வெறும் 14 பணியிடங்களுக்கு 4,607 பேர் விண்ணபித்தனர்.

அவர்களில் பெரும்பாலானோர் பொறியியல், எம்.பி.ஏ படித்த பட்டதாரி இளைஞர்கள் என்பது அதிர்ச்சிகரமான தகவலாக இருந்தது. அதன் பின்னர், 677 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு மற்றவர்களுக்கு நேர்முகத் தேர்வுக்கு வர அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்நிலையில், தூத்துக்குடியைச் சேர்ந்த பொறியியல் படித்த இளைஞரான தனசிங் என்பவரும் இந்த பணிக்கு விண்ணப்பித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘கூலி வேலை பார்த்துக் கொண்டே தான் இன்ஜினீயரிங் படித்தேன்.

இதுவரை எந்த வேலையும் கிடைக்கவில்லை. அதனால் துப்புரவு பணிக்கு விண்ணப்பித்தேன். வெட்டியாக இருப்பது தான் அவமானம். துப்புரவு பணி அல்ல’ என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers