ஆட்டை அறுப்பது போல் கழுத்தை கத்தியால் அறுத்த மர்மகும்பல்

Report Print Kavitha in இந்தியா

விழுப்புரத்தில் கம்யூனிஸ்டு கட்சியின் மகளிரணி அமைப்பளரின் கணவரை ஆட்டை அறுப்பது போல் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் சாலாமேடு வி.ஜி.பி.நகர் பகுதியை சேர்ந்த தொழிலாளி கதிர்வேல் (வயது 48) என்பவரே இச்சம்பவத்திற்கு பலியாகியுள்ளார்.

விழுப்புரம் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மகளிரணி அமைப்பாளராக மனைவி செண்பகவள்ளி (40) மற்றும் கணவன் கதிர்வேல் இருவரும் நேற்று இரவு சாப்பிட்டுவிட்டு அவர்களது குடிசை வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தனர்.

அப்போது நள்ளிரவில் 5 பேர் கொண்ட மர்மகும்பல் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் கதிர்வேலின் வீட்டுக்குள் நுழைந்து தூங்கிக்கொண்டிருந்த கதிர்வேலின் கழுத்தை ஆட்டை அறுப்பது போல் கத்தியால் அறுத்துள்ளனர்.

இதில் கதிர்வேல் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதனை கண்டு திடுக்கிட்டு எழுந்து செண்பகவள்ளி தனது கணவர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து காப்பாற்றுங்கள். காப்பாற்றுங்கள்.. என கூச்சலிட்டுள்ளார்.

நள்ளிரவு நேரம் என்பதால் அவரது சத்தம் அக்கம் பக்கத்தினர் யாரும் அங்கு வரவில்லை.

செண்பகவள்ளி சத்தம் போட்டதை தொடர்ந்து அந்த மர்மகும்பல் வீட்டை விட்டு வெளியே வந்து கதிர்வேலின் வீட்டுக்கு தீ வைத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

உடனே செண்பகவள்ளி வீட்டை விட்டு வெளியே வந்து வீட்டின் அருகே புதியதாக கட்டப்பட்டு வரும் வீட்டில் இரவு காவலாளியாக இருந்த நபரிடம் சென்று தனது கணவர் கொலை செய்யப்பட்ட விவரத்தையும், வீடு தீப்பற்றி எரிவதையும் கூறி அவரை தனது வீட்டுக்கு அழைத்து வந்தார்.

இதையடுத்து செண்பகவள்ளியும், காவலாளியும் சேர்ந்து பிணமாக கிடந்த கதிர்வேலின் உடலை மீட்டு வீட்டுக்கு வெளியே கொண்டு வந்தனர்.

இதுகுறித்து விழுப்புரம் தாலுகா பொலீசில் செண்பகவள்ளி புகார் செய்து போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

பின்னர் பிரேத பரிசோதனைக்காக கதிர்வேலின் உடலை மீட்டு முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பாக பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers