சென்னையிலிருந்து கொழும்புக்கு சென்ற தமிழிசை செளந்தர்ராஜனின் கணவர்: நடந்த சம்பவம்

Report Print Raju Raju in இந்தியா

சென்னையில் இருந்து கொழும்புவுக்கு சென்ற தமிழிசையின் கணவர் சவுந்தர்ராஜன், தனது பையில் இருந்த ரூ.50 ஆயிரம் ரூபாய் திருடு போனதை உணர்ந்து அதிர்ச்சியடைந்தார்.

தமிழக பாரதீய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை. இவருடைய கணவர் சவுந்தரராஜன். பிரபல டாக்டரான இவர், கடந்த மாதம் 11-ம் திகதி சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து கொழும்புக்கு சென்றார்.

அவரது பையில் செல்போன் சார்ஜ் ஏற்றக்கூடிய ‘பவர்பாங்க்’ இருந்தது. அதை எடுத்து வைத்து கொள்ளுமாறு பாதுகாப்பு பணியில் இருந்த ஊழியர்கள் கூறினர். பின்னர் அவர், கொழும்புக்கு சென்று பார்த்தபோது பையில் இருந்த ரூ.50 ஆயிரம் மாயமாகி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

சென்னை விமான நிலையத்தில் உடைமைகளை கொண்டு செல்லும்போது யாராவது அந்த பணத்தை திருடி இருக்கலாம் என கூறப்படுகிறது.

இதுபற்றி விமான நிலைய பொலிசில் சவுந்தரராஜன் புகார் செய்து உள்ளார்.

அதன்பேரில் விமான நிலைய பொலிசார் விமான நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கமெராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து, அவரது பணத்தை திருடியது யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்