இது நடந்தால் மட்டுமே திருமணம் செய்து கொள்வேன்: 40 வயதிலும் வைராக்கியமாக இருக்கும் நித்யா.. யார் அவர்?

Report Print Raju Raju in இந்தியா

திமுக ஆட்சிக்கு வந்தால் தான் திருமணம் செய்து கொள்வேன் என குடும்பத்தாரிடம் நிபந்தனை விதித்துள்ளார் நித்யா என்கிற நித்யானந்தம்.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நிழலாக, உதவியாளராக, குடும்ப உறுப்பினர்களை தாண்டி பாசத்திற்குரியவராக வலம் வந்தவர் தான் நித்யா.

ஊடகங்களில் அதிகம் நெருக்கம் காட்டாமல், குடும்ப விவகாரங்களை கசிய விடாமல் பார்த்துக்கொண்டதால் நித்யாவுக்கு கருணாநிதி குடும்பத்தில் எப்போதும் தனி இடம் உண்டு.

கருணாநிதியை முழு நேரமும் உடன் இருந்து பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக அரசுப் பணியை ராஜினாமா செய்தார் நித்யா.

கட்சியினர் மத்தியில் கருணாநிதியின் மறைவுக்கு பின்னர் நித்யா லைம்லைட்டில் இல்லை.

வயது 40-ஐ நெருங்கியதால் நித்யாவின் குடும்பத்தினர் அவரை திருமணம் செய்ய வலியுறுத்தி வருகின்றனர்.

இத்தனை ஆண்டுகளாக குடும்பத்தினருக்கு பிடி கொடுக்காமல் இருந்த நித்யா, இப்போது திருமணம் செய்து கொள்ள ஒத்துக்கொண்டதோடு ஒரு நிபந்தனையையும் விதித்துள்ளார்

அதாவது தமிழகத்தில் 20 தொகுதி இடைத்தேர்தல் மூலம் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தான் திருமணம் செய்து கொள்வேன் என கூறியுள்ளார்.

இதனிடையில் நித்யாவுக்கு பெண் பார்க்கும் படலம் எல்லாம் கூட முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது.

ஆனாலும் திமுக ஆட்சிக்கு பின்னரே திருமணம் என்ற முடிவில் அவர் இருக்கிறார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers