கட்டுப்பாட்டை இழந்த பஸ் : நாமக்கல்லில் திடீர் விபத்து.. நெஞ்சை பதற வைக்கும் வீடியோ

Report Print Kavitha in இந்தியா

நாமக்கல் திருச்செங்கோட்டில் இருந்து வந்த அரசு பஸ் ஒன்று கட்டுப்பாட்டை இழந்த வந்ததால் ரோடு ஓரத்தில் நடந்து போய்க்கிட்டு இருந்த இருவர் 2 பஸ் டயர்களுக்கு அடியிலேயே உடல் நசுங்கி பரிதபாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் திருச்செங்கோட்டில் இருந்து வந்த அரசு பஸ் ஒன்று நாமக்கல் மலைசுற்று பாதையில் வந்து கொண்டிருந்த வேளையில் அங்கே இருந்த பெட்ரோல் நிரப்பு நிலையம் ஒன்றிற்கு செல்ல பஸ் டிரைவர் முயன்றுள்ளார்.

இதன்போது சவுக்கு மரம் ஏற்றிக்கொண்டு முன்னால் போன லாரி மோதாமல் இருக்க பஸ்ஸை டிரைவர் வேறு பக்கமாக திருப்பியுள்ளார்.


திடீரென கட்டுப்பாட்டை இழந்த பஸ் தடுமாறி சாலையில் தாறுமாறாக ஓடியது. அப்போது சாலையை விட்டு ரோட்டோரம் நடந்து சென்று கொண்டிருந்த 2 பேர் மீதும் வேகமாக மோதி தாண்டியது.

இதில் அவர்கள் இருவருமே அங்கேயே பஸ் டயர்களுக்கு அடியிலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

அதுமட்டுமின்றி இந்த வீதியினுடாக பாடசாலை முடிந்து வந்து கொண்டுள்ள பிள்ளைகள் மீதும் மோதியுள்ளது.

தற்போது இது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி நெஞ்சை பதைபதைக்க வைத்துள்ளது.

குறித்த சம்பவத்தால் நாமக்கலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers