மனைவி உயிருடன் இருக்கும் வரை ராஜா போன்று வாழ்ந்த கணவன்! இன்று 70 வயதில் அவரின் பரிதாப நிலை?

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் மனைவி மற்றும் மகனை இழந்த தந்தை தற்போது யாருடைய ஆதரவுமின்றி நிற்கதியாய் நிற்பதால், அவர் என்னை அநாதைப் பொணமா மட்டும் உறவினர்கள் விட்டுவிடாதீர்கள் என்று வேதனையுடன் கூறியுள்ளார்.

கரூர் மாவட்டம், க.பரமத்தி ஒன்றியத்தில் உள்ள குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பன். இவர் தன்னுடைய 18 வயதில் பெரியம்மாள் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

பனைமரம் ஏறுவது தான் இவரது தொழில் என்பதால், பனை மரம் ஏறி தன்னுடைய குடும்பத்தை நடத்தி வந்தார். அப்போது இவர் தன்னுடைய 20 வயது மரம் ஏறும் போது, தவறி கிழே விழுந்ததால், இடது கால் முறிந்து போய்விட்டது.

பல மருத்துவமனைக்கு சென்று பார்த்தும் அதற்கு பலன் கிடைக்கவில்லை, வீட்டில் இருக்கும் படியை ஏறுவதற்கே இவர் கஷ்டப்பட்டதால், மனைவி பெரியம்மாள் வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்றி வந்துள்ளார்.

இந்த தம்பதிக்கு பிச்சைமுத்து என்ற மகன் இருந்தான். பிச்சை முத்துவுக்கும் வலிப்பு நோய் இருந்ததால், அவராலும் சரியாக எந்த ஒரு வேலைக்கும் செல்ல முடியவில்லை.

இப்படி மனைவியை நம்பி குடும்பம் ஓடிக் கொண்டிருந்த நிலையில், வெள்ளையம்மாள் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திடீரென்று இறந்துவிட்டார். இதனால் கருப்பன் மிகுந்த கஷ்டத்தை அனுபவித்து வந்துள்ளார்.

எந்த ஒரு வருமானமும் இல்லாததால், இவர் ஊரின் உள்ளே இருந்த பொது இடத்தை விட்டு காலி செய்யும் படி கிராமத்தினர் வற்புறுத்தியுள்ளனர்.

இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த போது, வெள்ளையம்மாள் வேலை செய்த பெரிய வீட்டு பண்ணைக்காரர்கள், ஊருக்கு வெளியே இருக்கும் இடத்தில் குடிசை போட்டு இருந்து கொள்ளும் படி கூறியுள்ளனர்.

அப்போது தன்னுடைய 40 வயதில் உடல் நிலை சரியில்லாத மகனுடன் அவர் அங்கு குடிசையில் தங்கி வந்துள்ளார். இரண்டு பேரும் எந்த ஒரு வேலைக்கும் செல்ல முடியாத காரணத்தினால், அரசாங்கம் கொடுக்கும் முதியோர் உதவி மற்றும் பிஎப் போன்றவற்றை நம்பி வாழ்ந்து வந்த போது, இவரின் மகனும் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார்.

தற்போது மனைவி, மகன், உறவினர்கள் என யாரும் இன்றி ஒரு வேலை சாப்பிட்டிற்கே கருப்பன் கஷ்டப்பட்டு வருகிறார். தண்ணீர் வேண்டும் என்றால் கூட சில தூரம் சென்று தான் பிடிக்க வேண்டும்.

இவரின் பரிதாப நிலையை கண்டு அந்த வழியே செல்லும் நபர்கள் இவருக்கும் இரண்டு, மூன்று குடம் தண்ணீர் பிடித்து கொடுத்து உதவுகின்றனர். அதுமட்டுமின்றி அந்த வழியே ஆடு, மாடு மேய்க்க வருபவர்கள் கஞ்சி கொடுப்பார்கள், அவர்கள் இல்லை என்றால் அவரின் நிலை இதைவிட பரிதாபமாக மாறிவிடும்.

இது குறித்து அவர் கூறுகையில், எனக்கு இப்போது 70 வயது ஆகிவிட்டது. என் மனைவி இருக்கும் போது ராஜா மாதிரி வாழ்ந்தேன். இப்போ அவள் புகைப்படத்தை வைத்து தினமும் கையெடுத்துக் கும்பிடுறேன் தினமும் அழுகிறேன்.

எனக்கு ஒரு வேளை உடல் நிலை சரியில்லாமல் போய் படுக்கை படுக்கையா கிடந்தா, யாரும் மருத்துவம் பார்க்க வேண்டாம். பணம் செலவாகிவிடும் என்று ஓரமாக நின்றுடாதீங்க, முன்னவந்து எனக்குக் கொள்ளி போடணும். என்னைய அநாதைப் பொணமா மட்டும் விட்டுடாதீங்க உறவினர்களே என்று வேதனையுடன் கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...