பிரபல நடிகர் கருணாகரனின் ஆபாச பேச்சு ஆடியோ... பொலிசில் பரபரப்பு புகார்

Report Print Raju Raju in இந்தியா

நகைச்சுவை நடிகர் கருணாகரன் தங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக திரைப்பட இயக்குனர் சியோன் மற்றும் தயாரிப்பாளர் விஜய் ஆனந்த் பொலிசில் புகார் அளித்துள்ளனர்.

”பொது நலன் கருதி” என்ற திரைப்படம் இரு தினங்களுக்கு முன்னர் வெளியானது.

இப்படத்தில் 3 கதாநாயகர்களில் ஒருவராக பிரபல நகைச்சுவை நடிகர் கருணாகரன் நடித்துள்ளார்.

இந்நிலையில் அந்த திரைப்படத்தின் இணை தயாரிப்பாளர் விஜய் ஆனந்தை கருணாகரன் போனில் ஆபாசமாக பேசிய சமீபத்தில் ஆடியோ வெளியானது.

இதையடுத்து படத்தின் இயக்குனர் ஸியோனும், விஜய் ஆனந்தும் கருணாகரன் மீது சென்னை காவல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அதில், திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் விளம்பரப்படுத்துதல் போன்ற நிகழ்ச்சிகளுக்கு அழைத்த போது கருணாகரன் வரவில்லை.

இதுதொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தங்களுக்கு கருணாகரன் தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுத்தார் என கூறப்பட்டுள்ளது.

கருணாகரனிடம் இருந்து தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த இயக்குனர் ஸியோன், கந்து வட்டிக்காரர்கள் மிரட்டும் தொனியிலேயே கருணாகரன் தன்னை மிரட்டுவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...