நடிகை சந்தியாவின் கொலையில் யார் அந்த நபர்? அவள் எனக்கு செய்த துரோகம்: வெளியான தகவல்கள்

Report Print Deepthi Deepthi in இந்தியா

சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசைப்பட்ட தனது மனைவி சந்தியாவை கொலை செய்த இயக்குநர் பாலகிருஷ்ணன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் சில அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

இரண்டு குழந்தைகளுக்குத் தாயான சந்தியாவின் சில நடவடிக்கைகள் பாலகிருஷ்ணனுக்குப் பிடிக்கவில்லை. இதனால் இருவரும் பிரிந்து வாழ்ந்தனர்.

விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பினார் சந்தியா. இதனால் கடும் மனவேதனையில் இருந்தார் பாலகிருஷ்ணன்.

இதற்கிடையில் தான் நாம் இருவரும் ஒன்றாக மீண்டும் சேர்ந்து வாழ்வோம் என மனைவி சந்தியாவை வீட்டிற்கு வரவழைத்து கொலை செய்துள்ளார்.

இவர் கொலை செய்வதற்கு காரணம் அவருக்கு சந்தியா குறித்து கிடைத்த அதிர்ச்சி தகவல்கள் தான் என தெரியவந்துள்ளது.

சந்தியா தொடர்பாக எனக்கு வந்த போன் அழைப்பே காரணம் . அதுவும் ரத்த சொந்தத்திலிருந்துதான் அவருக்கு அந்த போன் அழைப்பு வந்துள்ளது. போனில் பேசியவர் கூறிய தகவல்களைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்துபோய், அவள் எனக்கு செய்த துரோகத்தை தாங்கிகொள்ளமுடியாமல் இப்படி கொலை செய்தேன் என அவர் பொலிசாரிடம் விசாரணையில் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தியாவை சுத்தியலால் அடித்து கொலை செய்துவிட்டு அன்றைய தினம் முழுவதும் சந்தியாவின் சடலத்துடனே தூங்கியிருக்கிறார் பாலகிருஷ்ணன்.

சைதாப்பேட்டைக்குச் சென்ற அவர், பட்டன் கத்தி ஒன்றை வாங்கியுள்ளார். அதை வைத்து சந்தியாவின் உடலைக் கூறுபோட்டுள்ளார். இரண்டு கால்களையும் வலது கையையும் துண்டாக வெட்டியெடுத்த அவர், 25 கிலோ அரிசி பையில் வைத்து குப்பைத் தொட்டியில் போட்டுள்ளார். இடுப்புக்குக் கீழ் உள்ள பகுதியைத் தூண்டாக வெட்டியெடுத்து அதை அடையாற்றின் கரையோரத்தில் வீசியுள்ளார்.

சந்தியா இறந்துபோன பிறகு, தினமும் பத்திரிகைகளில் அதுகுறித்த செய்திகளை தவறாமல் படித்துள்ளார், மேலும் அதனை வைத்து ஒரு கதையையும் தயார் செய்து படமாக்க முடிவு செய்திருந்தார் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers