சில நிமிடங்களில் திருமணம்! மணப்பெண் செயலால் அதிர்ச்சியில் உறைந்த மாப்பிள்ளை

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் தாலி கட்டும் நேரத்தில் மணப்பெண் மறுத்ததால், திருமணம் நின்ற சம்பவம் இரு வீட்டாரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கர நாராயணசாமி கோயிலில் நேற்று திருமணம் செய்வதற்காக 21 பேர் பதிவு செய்திருந்தனர்.

உடப்பன் குளத்தை சேர்ந்த மணமகன் காளீஸ்வரன், தேனி மாவட்டம் சின்ன கூலாம்பட்டியை சேர்ந்த மணமகள் பாண்டியம்மாள் ஆகியோர் திருமணத்துக்காக வந்திருந்தனர்.

இந்நிலையில் எதிர்பாராதவிதமாக சுவாமி சன்னதி முன்பு சாமி ஆடுவது போன்று மணப்பெண் பாண்டியம்மாள் கீழே விழுந்தார்.

பின்னர் திருமணம் செய்ய விருப்பமில்லை என்றும், தாம் திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை எனவும் பாண்டியம்மாள் கூறியதால் மணமகன் காளீஸ்வரன் உள்ளிட்ட உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்

பாண்டியம்மாளிடம் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் அவர் திருமணம் செய்ய சம்மதிக்கவில்லை.

இதனால் திருமணம் நின்றதை அடுத்து, இருவீட்டாரும் சோகத்துடன் கோயிலில் இருந்து வெளியேறினார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers