நேரம் சரியில்லாததால் மகளை கொன்று இளம் காதலியுடன் வாழ முடிவு செய்தேன்: தந்தை அதிர்ச்சி வாக்குமூலம்

Report Print Deepthi Deepthi in இந்தியா

மும்பை தாராவில் தனது மகள் மற்றும் மனைவியை கொலை செய்தது குறித்து தந்தை அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார்.

மும்பை தாராவி கமலா நகர், டைமண்ட் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த இலியாஸ் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மனைவி தாகசின் ஐஹ்ரா (34), மகள் அலியாவை (4) கழுத்தைஅறுத்து கொலை செய்தார்.

இதற்கு இலியாஸின் இளம் காதலி ஆப்ரின் பானு உடந்தையாக இருந்துள்ளார். இருவரையும் கொலை செய்து எரித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து இலியாஸ் செயத் மற்றும் ஆப்ரின் பானுவை கைது செய்து விசாரணை நடத்தினர்.

இலியாஸ் செயத் அளித்த வாக்கு மூலத்தில், எனது இளைய மகள் அலியாவால் எனக்கு கெட்ட நேரம் வந்தது. அவள் பிறந்ததில் இருந்து எனக்கு எல்லாவற்றிலும் நஷ்டம் தான் ஏற்பட்டது.

எனவே தான் அவளை மட்டும் கொலை செய்யாமல், எனது மனைவியையும் சேர்த்து கொலை செய்தேன். பின்னர் எனது மூத்த மகள் மற்றும் காதலி ஆப்ரினுடன் வாழ முடிவு செய்தேன் என வாக்குமூலம் அளித்துள்ளார்.

எனவே தான் மனைவியுடன் அவளையும் கொலை செய்தேன். நான் ஆப்ரின் பானுவை திருமணம் செய்துவிட்டு மூத்த மகளுடன் வாழ விரும்பினேன்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...