திருமணத்தில் 10 நிமிடம் நடனம் ஆடிய மணமகனுக்கு நேர்ந்த கதி

Report Print Deepthi Deepthi in இந்தியா

நொய்டாவில் தனது திருமணத்தின்போது நடனம் ஆடிய மணமகன் சாக்கடைக்குள் விழுந்துள்ள சம்பவம் நடந்துள்ளது.

Hoshiyarpur கிராமத்தில் ஹொட்டல் ஒன்றில் அமித் யாதவ் - சோனம் ஆகிய இருவருக்குத் திருமணம் நடைபெற்றது.

இவர்கள் திருமணத்தின்போது, அமித் யாதவ் சுமார் 10 நிமிடங்கள் நடனம் ஆடியுள்ளார். நடனத்தின் இறுதியில் திடீரென சாக்கடைக்குள் கவிழ்ந்து விழுந்துள்ளார். இவர் மட்டுமன்றி 15 பேர் சாக்கடைக்குள் விழுந்துள்ளனர்.

இரண்டு சிறுவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், சில பெண்களின் போன்கள் மற்றும் நகைகளை காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, இவர்கள் திருமணம் நடைபெற்ற ஹொட்டல் சாக்கடையுடன் தொடர்புடையது.

இதனால் ஒரு பகுதி இடிந்ததில் சாக்கடைக்குள் விழுந்துள்ளது. இதனால் திருமணத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டு பின்னர் நடத்தப்பட்டது. ஹொட்டல் நிறுவனம் நஷ்ட ஈடாக 3 லட்சம் கொடுக்க வேண்டும் என மணமகன் தரப்பில் பொலிசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers