சந்தியா இதற்காக கொல்லப்பட்டு இருக்கலாம்: சகோதரி சஜிதா அதிர்ச்சி தகவல்

Report Print Raju Raju in இந்தியா

சந்தியாவை கொலை செய்தது ஒன்றுக்கும் மேற்பட்டவர்களாக இருக்கலாம் என அவரது சகோதரி சஜிதா கூறியுள்ளார்.

சென்னை பள்ளிக்கரணை பகுதியில் உடல் பாகங்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்ட 40 வயது சந்தியாவின் தலை இன்னும் சிக்கிய பாடில்லை

இவரைக் கொடூரமாக கொன்றதாக அவரது கணவர் பாலகிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கொலையில் பாலகிருஷ்ணன் மட்டும் சம்பந்தப்படவில்லை. இது போன்ற கொடூர கொலையை ஒருவர் செய்திருக்க முடியாது. இதில் சதி இருப்பதாக அவரது உறவினர்கள் கூற ஆரம்பித்துள்ளனர்.

இது குறித்து சந்தியாவின் சகோதரி சஜிதா கூறுகையில், சந்தியாவின் கண், கிட்னி, இதயம் உள்ளிட்ட உடலுறுப்புக்காக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் உள்ளது.

இந்த சம்பவத்தில் பலர் ஈடுபட்டிருக்கலாம் எனவும், பொலிஸ் இந்த வழக்கை திசை திருப்ப முயல்கின்றனர் எனவும் கூறியுள்ளார்.

மேலும், பொலிசார் தரப்பிலேயே இந்த சந்தேகத்தை சிலர் எழுப்புவதாகவும், இது குறித்து தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்றும் சஜிதா கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...