சிறு வயதிலிருந்து குண்டாக இருப்பேன்... அதை பற்றி நீங்க ஏன் கவலைப்படனும்? கலங்கிய கேரள புதுப்பெண்

Report Print Raju Raju in இந்தியா

கேரளாவில் இளம்பெண்ணின் தோற்றத்தை வைத்து அவரை வயதான பெண்ணாக சித்தரித்தது குறித்து பாதிக்கப்பட்ட பெண் குமுறியுள்ளார்.

கேரளாவின் கண்ணூரை சேர்ந்த அனூப் (29) என்பவருக்கும் ஜூபி (27) என்ற பெண்ணுக்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது.

மணமகளின் தோற்றத்தை வைத்து புதுமணத் தம்பதியை அவமதிக்கும் வகையில் வாட்ஸ்அப்-பில் சிலர் தவறான தகவல்களைப் பரப்பினர்.

பெண்ணின் பல கோடி ரூபாய் சொத்துக்கு ஆசைப்பட்டு அனூப் தன்னை விட மூத்த, 48 வயது பெண்ணை மணந்து கொண்டதாக வாட்ஸ்அப்-பில் பொய்யான தகவல் பரப்பப்பட்டுவந்தது.

இது தொடர்பாக 11 வாட்ஸ்அப் அட்மின்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்

இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் ஜூபி கூறுகையில், நான் சிறுவயதிலிருந்தே சற்று குண்டாக இருப்பேன். திருமண தினத்தில் பட்டுப்புடவை கட்டியிருந்ததால், புகைப்படத்தில் அப்படித் தெரிந்தது.

இதற்காக, மனச்சாட்சியே இல்லாமல் பொய்ச் செய்தி பரப்பி, எங்களை மிகுந்த மன வேதனை அடைய வைத்துள்ளனர். இந்தியாவில் திருமணம் முடிக்க பெண்ணுக்கு 18 வயது, ஆணுக்கு 21 வயது போதும்.

அப்படி இருக்கையில், எங்கள் வயது குறித்து இவர்கள் ஏன் ஆராய வேண்டும் எனக் குமுறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers