பேஸ்புக் நண்பனை நம்பி பிறந்தநாள் பார்ட்டிக்கு சென்ற இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி! நடந்த அதிர்ச்சி சம்பவம்

Report Print Santhan in இந்தியா

இந்தியாவில் பேஸ்புக் நண்பனை நம்பி பிறந்தநாள் பார்டிக்கு சென்ற இளம் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த 24 வயது பெண் பெங்களூருவில் தங்கி எம்.பி.ஏ படித்து வருகிறார். அப்போது இவருக்கு பேஸ்புக் மூலம் ஆரிப் என்பவர் நண்பராக அறிமுகமாகியுள்ளார்.

அதன் பின் இருவரும் பேஸ்புக்கில் நண்பர்களாக தொடர்ந்து பேசி வந்துள்ளனர்.

இந்நிலையில் ஆரிப்பின் பிறந்தநாள் சமீபத்தில் வந்துள்ளது. இதற்காக நண்பர்கள் அனைவரையும் அழைத்த ஆரிப், இந்த பெண்ணையும் அழைத்துள்ளார்.

ஆரிப்பை நம்பி பிறந்தநாள் விழா நடைபெறும் இடத்திற்கு அந்த பெண் சென்றுள்ளார். அங்கு ஆதித்யா என்ற ஆரிப்பின் நண்பர் இவருக்கு அறிமுகமாகியுள்ளார்.

இதைத் தொடர்ந்து அங்கிருந்த பெண்கள், நண்பர்கள் மது அருந்தியதால், இவரும் அவர்களுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார்.

போதை அதிகமானதால் மயக்கமடைந்த மாணவி அங்கிருந்த அறையில் தூங்கியுள்ளார். அந்த நேரத்தில் அனைவரும் உணவு வாங்கி வருவதற்கு வெளியே சென்றதால், ஆதித்யாவும் மாணவியும் மட்டும் தனிமையில் இருந்தனர்.

இதை தனக்கு சாதகமாக்கிக் கொண்ட ஆதித்யா மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதையடுத்து அந்த பெண் அருகில் இருக்கும் காவல்நிலையம் ஒன்றில் இது குறித்து புகார் அளித்துள்ளார். அதன் பின் மாணவிக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட போது உண்மை என தெரியவந்ததால், பொலிசார் ஆதித்யாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஆதித்யா ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூலைச் சேர்ந்தவர் எனவும், அவர் மரத்தஹள்ளியில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார் என பொலிசார் கூறியுள்ளனர்.

மேலும் ஆரிப் மற்றும் ஆதித்யாவின் வேண்டுகோளை ஏற்று மாணவி புகாரை திரும்ப பெற முடிவெடுத்தாலும், பொலிசார் அதை ஏற்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து அந்த மாணவி கூறுகையில், சம்பவ தினத்தன்று மது அருந்தியிருந்ததால், என்னால் ஒன்றும் செய்யமுடியவில்லை என்று கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்