இந்திய வீரர்கள் 44 பேர் மரணம்... நான் சொர்க்கத்தில் இருக்கிறேன்: கனடாவிலும் செயல்படும் அமைப்பு, சிறிது நேரத்தில் தீவிரவாதிகள் வெளியிட்ட வீடியோ

Report Print Deepthi Deepthi in இந்தியா

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் சி.ஆர்.பி.எப். எனப்படும் மத்திய ரிசர்வ் பொலிஸ் படையினர் வாகனத்தில் சென்றபோது சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வெடிபொருள் நிரப்பிய வாகனத்தை வெடிக்கச் செய்து பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 44 இந்திய வீரர்கள் மரணம் அடைந்தனர்.

10 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

2,500 வீரர்கள் 70க்கும் மேற்பட்ட வாகனங்களில் ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு நேற்று சென்றனர்.

புல்வாமா மாவட்டம் லேத்போரா பகுதியில் ஜம்மு - ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் நேற்று பகல் 3:30 மணிக்கு இந்த வாகனங்கள் சென்றபோது சாலையோரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வெடிபொருள் நிரப்பப்பட்ட வாகனத்தை பயங்கரவாதிகள் வெடிக்கச் செய்தனர்.

இந்த தாக்குதலில் வீரர்கள் பயணித்த இரண்டு பேருந்துகள் சிக்கின. இதில் 44 வீரர்கள் உயிரிழந்தனர். 10 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். பலர் பலத்த காயமடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

யார் இந்த அமைப்பு? கனடாவிலும் செயல்படுகிறதா?

தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ள ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கம், காஷ்மீரை இந்தியாவில் இருந்து பிரித்து பாகிஸ்தானுடன் சேர்ப்பதை நோக்கமாக கொண்டது.

2000ம் ஆண்டிலிருந்து காஷ்மீரில் தாக்குதல்களை நடத்துகிறது. இதன் தலைவர் மசூத் அசார். 2016ல் நடந்த உரி ராணுவ முகாம் தாக்குதல், பஞ்சாப் பதன்கோட் விமானதளம் தாக்குதல் உள்ளிட்ட சம்பவங்களில் இதற்கு தொடர்பு உள்ளது.

2001ல் பார்லிமென்ட்டில் தாக்குதல் நடத்திய லக் ஷர் இ தொய்பா அமைப்புடன் இணைந்து செயல்பட்டுள்ளது.

தலிபான், அல் குவைதா போன்ற பயங்கரவாத அமைப்புகளுடன் இதற்கு தொடர்பு உள்ளது. பாகிஸ்தானில் 2002ல் தடை செய்யப்பட்ட இந்த அமைப்பு பல்வேறு பெயர்களில் பாகிஸ்தான், ரஷ்யா, கனடா உள்ளிட்ட நாடுகளில் இயங்குகிறது.

வெளியான வீடியோ

தாக்குதல் நடந்த சிறிது நேரத்தில் ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்பு இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்று ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளது.

அதில் இந்த தாக்குதலை நடத்திய ஆதில் அஹமது பேசியுள்ளான். இதை நீங்கள் பார்க்கும் போது நான் சொர்க்கத்தில் இருப்பேன். ஓராண்டாக ஜெய்ஷ் - இ - முகமது அமைப்பில் பணியாற்றினேன். இது காஷ்மீர் மக்களுக்கு என் கடைசி செய்தி.

இந்தியாவுக்கு எதிராக தெற்கு காஷ்மீரைச் சேர்ந்தவர்கள் போராடி வருகின்றனர். அதில் வடக்கு காஷ்மீரைச் சேர்ந்தவர்களும் இணைய வேண்டும்.

எங்கள் அமைப்பின் தலைவரை சமீபத்தில் கொன்றுள்ளனர். அதனால் நாங்கள் வலுவிழந்துவிடுவோம் என நினைத்துள்ளனர், அது நடக்காது என்று கூறியுள்ளான்.

'இந்த கொடூர தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறேன். இந்த வீரர்களின் உயிர் தியாகம் வீணாகாது என்ற உறுதியை அளிக்கிறேன் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

இது தொடர்பாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் ராணுவ அதிகாரிகளுடன் பிரதமர் மோடி தொலைபேசி மூலம் பேசியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers