தீவிரவாதிகளின் வெறிச்செயல்! பலியான தமிழக வீரரின் புகைப்படம் வெளியானது

Report Print Raju Raju in இந்தியா

காஷ்மீரில் நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்த தூத்துக்குடியை சேர்ந்த வீரரான சுப்ரமணியனின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

புல்வாமா மாவட்டம், அவந்திப்போராவில், ஜம்மு ஸ்ரீநகர் தேசிய நெடுஞ் சாலையில், சிஆர்பிஎப் வீரர்கள் வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர்.

ஜம்முவில் இருந்து ஸ்ரீநகரில் உள்ள முகாமுக்கு வீரர்கள் இந்த வாகனங்களில் சென்றனர்.

மொத்தம் 70 வாகனங்கள் அணி வகுத்துச் சென்றன. அப்போது அவர்கள் சென்ற வாகனங்களை குறி வைத்து குண்டுகள் வெடித்தன. அதில் குண்டு வெடித்த வாகனத்தில் இருந்த ஏராளமான வீரர்கள் சிக்கிக் கொண்டனர். பயங்கர தாக்குதலில் 44 வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

அந்த தாக்குதலில் தமிழத்தின் தூத்துக்குடியை சேர்ந்த சுப்ரமணியன் என்ற வீரரும் பலியாகி உள்ளார்.

அவரது புகைப்படம் தற்போது வெளியாகியுள்ள நிலையில் சுப்ரமணியத்தின் மரண செய்தியை கேட்டு தூத்துக்குடி மாவட்டமே சோகமடைந்துள்ளது.


மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்