44 பேரை பலிகொண்ட தாக்குதல்! முன் கூட்டியே உளவுத்துறை எச்சரித்தும் கோட்டை விட்ட அதிகாரிகள்.. பரபரப்பு தகவல்

Report Print Raju Raju in இந்தியா

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் இந்தியாவின் மத்திய ரிசர்வ் காவல் படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தடுக்கப்பட்டிருக்கலாம் என்று அம்மாநிலத்தின் உளவுத்துறை நம்புகிறது

புல்வாமாவில் நடந்த தாக்குதலில் 44 பேர் கொல்லப்பட்டனர்.

இத்தாக்குதலுக்கு ஜெய்ஷ்-ஈ-மொஹமத் என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

இந்நிலையில் பாதுகாப்பு படைகள் மீது, மிகப்பெரிய அளவில் தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிருப்பதாக ஏற்கனவே, பிப்ரவரி 12ம் திகதி நாடு முழுவதும் உள்ள உளவு அமைப்புகளுக்கு தகவல் தெரிவித்ததாக மூத்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

இந்த எச்சரிக்கை குறித்து காவல்துறை தலைவர் தில்பாக் சிங், டெல்லியில் உள்ள தேசிய பாதுகாப்பு ஆலோசகரிடம் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதே போன்றதொரு தாக்குதலை ஆப்கானிஸ்தானில் சமீபத்தில் நடத்திய காணொளியை ஜெய்ஷ்-ஈ-மொஹமத் அமைப்பு வெளியிட்டு, பாதுகாப்பு படையினரை பழி வாங்க இத்தகைய தாக்குதல் காஷ்மீரிலும் விரைவில் நடத்தப்படும் என்று கூறியிருந்ததே, மாநில உளவுத்துறை விடுத்த எச்சரிக்கைக்கு காரணம்.

புது டெல்லியில் உள்ள அதிகாரிகளிடம் முன்னரே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்குமானால், பிப்ரவரி 14 அன்று நடந்த இந்த தாக்குதல் நிச்சயமாக பாதுகாப்பு குறைபாடுதான் என்பது தெளிவு என்று பெயர் வெளியிட விரும்பாத பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers