இந்திய வீரர்கள் மரணமடைந்தது எப்படி? இவ்வளவு வீரர்கள் எதற்காக? சில பிரத்யேக அதிர்ச்சி தகவல்கள்

Report Print Deepthi Deepthi in இந்தியா

காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டு 46 இந்திய வீரர்கள் மரணமடைந்த சம்பவத்திற்கு அமெரிக்கா, பிரான்ஸ், இலங்கை, நேபாளம் உள்ளிட்ட உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என நாட்டு மக்களுக்கு உறுதியளிப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

இந்திய வரலாற்றில் நடைபெற்ற மிக மோசமான பயங்கரவாத தாக்குதல் இது ஆகும். இந்த தாக்குதல் அனைவரது மனதையும் நிலைகுலைய வைத்துள்ளது.

விடுமுறையில் இருந்து ஊர் திரும்பியபோது நடந்த துயரம்

2,600 வீரர்கள் தங்களது விடுமுறையை முடித்துவிட்டு ஜம்முவில் இருந்து ஸ்ரீநருக்கு சென்றுள்ளளனர். அங்கிருக்கும் முகாம்களுக்கு தங்களுக்கான பணிக்கு திரும்பியுள்ளனர்.

2,600 வீரர்கள் 78 வாகனங்களில் அணிவகுத்து சென்றுள்ளனர். வாகனங்களுக்கு பலத்த பாதுகாப்பும் கொடுக்கப்பட்டிருந்தது.

ஆனால், படைநகர்வு என்பது ஆயிரம் வீரர்களுக்கு மேல் இருக்காது. ஆனால் இந்த முறை 2,600 வீரர்கள் சென்றுள்ளனர். இதற்கு காரணம் கடந்த 8 நாட்களாக இருந்த கடும் பனிப்பொழிவு காரணமாக தேசிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டிருந்தது.

இதன் காரணமாக இவ்வளவு வீரர்கள் ஒன்றாக சென்றுள்ளனர். இதனை தீவிரவாத அமைப்பு தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டனர். அதுவும் நடுவில் இருந்த இராணுவ வாகனத்தில் 350 கிலோ வெடிப்பொருட்களுடன் காரை மோதி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்