தீவிரவாத தாக்குதலில் மகனை பறிகொடுத்த தந்தை! இன்னொரு மகனையும் சண்டைக்கு அனுப்புவேன் என சூளுரை

Report Print Raju Raju in இந்தியா

காஷ்மீரில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் பீகாரை சேர்ந்த வீரர் உயிரிழந்த நிலையில், தன்னுடைய இன்னொரு மகனையும் சண்டைக்கு அனுப்புவேன் என இறந்த வீரரின் தந்தை கூறியுள்ளார்.

ஜம்மு-வில் இருந்து 78 வாகனங்களில் சுமார் 2,500-க்கும் மேற்பட்ட சி.ஆர்.பி.எஃப் வீரர்கள், நேற்று ஸ்ரீநகர் நோக்கி சென்றுகொண்டிருந்தனர். அவர்கள், புல்வாமா மாவட்டம் அவாந்திபோரா என்ற பகுதிக்கு வந்தபோது, 350 கிலோ வெடிபொருகளை ஏற்றிக்கொண்டு எதிரே வந்த கார், சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் வந்த பேருந்தின்மீது மோதியது.

இந்தத் தாக்குதலில், இதுவரை 44 வீரர்கள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் பீகாரை சேர்ந்த ரத்தன் தாகூர் என்ற வீரரும் உயிரிழந்தார்.

ரத்தனின் இறப்பு குறித்து அவரின் தந்தை கூறுகையில், தாய்நாட்டுக்காக என் மகனை நான் தியாகம் செய்துள்ளேன்.

என்னுடைய இன்னொரு மகனையும் சண்டைக்கு நான் அனுப்புவேன், தாய் நாட்டுக்காக அவனையும் கொடுக்க தயாராக உள்ளேன்.

ஆனால் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடியை கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers