கோழைத்தனமான தாக்குதல்! தீவிரவாத தாக்குதல் குறித்து பிரபல நடிகர் சூர்யாவின் கருத்து

Report Print Raju Raju in இந்தியா

ஜம்மு காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதலை கண்டித்து திரையுலக பிரபலங்கள் ட்வீட் செய்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடந்த தீவிரவாத தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் 44 பேர் வீர மரணம் அடைந்துள்ளனர்.

அதில் 2 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.

இந்த கொடூர தாக்குதலுக்கு திரையுலக பிரபலங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

நடிகர் சூர்யாவின் பதிவில், சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் மீது நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதல் குறித்து அறிந்து மிகுந்த கவலை அடைந்ததுடன், இதயம் நொறுங்கிவிட்டது.

நமக்காக மகன், சகோதரர், கணவர் அல்லது தந்தையை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள் என்று தெரிவித்துள்ளார்

இதே போல இயக்குனர் விக்னேஷ் சிவன், நடிகர் அக்‌ஷய்குமார், நடிகைகள், டாப்ஸில், காஜல் அகர்வால் போன்றோரும் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்