தீவிரவாத தாக்குதலால் ஒட்டு மொத்த இந்தியாவே கண்ணீரில் இருக்க! ஏ.ஆர்.ரஹ்மான் நீங்கள் இப்படி பண்ணலாமா?

Report Print Santhan in இந்தியா
2995Shares

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஜம்மு காஷ்மீரில் இராணுவத்தினர் மீது தீவிரவாதிகள் மீது நடத்திய தாக்குதலைப் பற்றி கூறாமல் வேறொன்றிற்கு டுவிட் செய்திருந்ததால், அவரை இணையவாசிகள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

இந்தியாவின் ஜம்மு காஷ்மீரில் ஜெய்ஷ் - இ- முகமது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த அடில் அகமது என்பவர் நடத்திய தாக்குதலில் 44 பேர் பரிதாபமாக பலியாகினர்.

இதனால் ஒட்டு மொத்த தேசமே கவலையில் இருக்கும் நிலையில், இப்படிப்பட்ட கொடூர செயலில் ஈடுபட்ட தீவிரவாதிகளுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

நாட்டிற்கு தியாகம் செய்த வீரர்களுக்கு திரைப்பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் உட்பட பலரும் வருத்தம் மற்றும் ஆழ்ந்த இரங்களை தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த சம்பவத்தைப் பற்றி எந்த ஒரு கருத்தும் தெரிவிக்காமல், பாடகி ஒருவருக்கு திருமண வாழ்த்து கூறியுள்ளார். இதைக் கண்ட இணையவாசிகள் பலரும் அங்கு நாட்டிற்காக பலரும் செத்துக் கொண்டிருக்கின்றனர்.

அதைப் பற்றி எதுவும் தெரிவிக்காமல் இப்படி போட்டுள்ளீர்களே என்று கமெண்ட் செய்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்