13 வயது மாணவி பலாத்காரம் செய்து கொடூர கொலை: தமிழகத்தை சேர்ந்தவருக்கு மரண தண்டனை

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் 13 வயது மாணவியை பலாத்காரம் செய்து, கழுத்தை அறுத்து கொலை செய்த இளைஞருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூரை சேர்ந்த 13 வயதான ஒன்பதாம் வகுப்பு மாணவியை அசோக் குமார் என்பவர் கடந்த 2017-ல் வீடு புகுந்து பலாத்காரம் செய்தார்.

பின்னர் மாணவியை கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்தார்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிசார் அசோக்குமாரை கைது செய்தனர்.

அவர் மீதான வழக்கு செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் நடந்தது.

இந்நிலையில் குற்றவாளி அசோக்குமாருக்கு தூக்கு தண்டனையும், ரூ.25000 அபராதமும் விதித்து மகிளா நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்