தீவிரவாதியால் இறந்த இராணுவ வீரரின் உடலை தோளில் சுமந்து சென்ற அமைச்சர்! வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ

Report Print Santhan in இந்தியா

இந்தியாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குலில் 44 பேர் பலியாகியுள்ள நிலையில், இறந்தவரின் உடலை ராஜ்நாத் சிங் தூக்கிச் சென்ற வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 44 பேர் பலியாகியுள்ள நிலையில் அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு, அடையாளம் காணப்பட்டு பின்னர் பதக்ம் என்ற பகுதியில், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பெட்டிகளில் வைக்கப்பட்டது.

இன்று மதியம் அங்கு சென்ற மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜம்மு காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக், ராணுவத்தின் வடக்கு கமாண்டர் லெப்டினண்ட் ஜெனரல் ரன்பீர் சிங் ஆகியோர் ராணுவ வீரர்கள் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

இதன் பிறகு ராணுவ வீரர்களின் உடல் அவர்களது குடும்பத்தாரிடம் ஒப்படைப்பதற்காக, வாகனங்களில் எடுத்துச் செல்லப்பட்டது.

அப்போது அமைச்சர் ராஜ்நாத் சிங் உடல் வைத்திருந்த சவப் பெட்டியை தன்னுடைய தோளில் சுமந்து கொண்டு சென்று வண்டியில் ஏற்றினார்.

அந்த வீடியோ இப்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers