இளம் திருநங்கை தலையை தனியாக வெட்டி எடுத்த இளைஞர்... அத்துமீறியதால் வந்த வினை! பகீர் பின்னணி

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் கோவிலுக்குள் வைத்து அத்துமீறிய நிர்வாகியை தட்டிக்கேட்ட திருநங்கையான பூசாரி, தலை துண்டித்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடியில் உள்ள தேவி ஸ்ரீசமயபுரம் மாரியம்மன் கோவிலில் ராசாத்தி என்ற திருநங்கை பூசாரியாக இருந்து வந்தார்.

வெள்ளிக்கிழமை மாலை கோவிலின் அருகில் நின்று கொண்டிருந்த ராசாத்தியை இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்தனர். தலையை துண்டித்து எடுத்துச்சென்ற கொலையாளிகள், மற்றொரு பகுதியில் தலையை வீசிச்சென்றனர்.

ராசாத்தி கொலை தொடர்பாக மாரியம்மன் கோவிலை கட்டிய மூதாட்டியின் பேரன் மருது என்ற இளைஞரை பிடித்து விசாரித்த போது, கொலைக்கான காரணம் தெரியவந்தது.

மூதாட்டிக்கு பின்னர், இந்த கோவிலை பூசாரியாக இருந்து திருநங்கை ராசாத்தி நிர்வாகித்து வந்துள்ளார். மூதாட்டியின் பேரன் மருது செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ராசாத்தி பக்தர்களுக்கு அருள்வாக்கு சொல்வதால் இந்த கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து சென்றுள்ளனர்.

கோவிலில் கிடைத்த வருமானம் மூலம் மருதுவுக்கு கோவிலுக்கு அருகில் பெட்டிக்கடை ஒன்றையும் வைத்து கொடுத்துள்ளார் ராசாத்தி.

இந்நிலையில் ராசாத்தியை சந்திக்க வரும் திருநங்கைகள் சிலரிடம் மருது அத்துமீறுவதை வழக்கமாக்கி உள்ளார். ஒரு கட்டத்தில் கோவிலுக்குள் இந்த நிகழ்வுகள் நடப்பதை அறிந்த ராசாத்தி, மருதுவை எச்சரித்ததோடு கோவில் நிர்வாகத்தில் இருந்தும் விரட்டியடித்துள்ளார்.

மேலும் கோவிலின் வரவு செலவுகளையும் ராசாத்தி பார்த்து வந்துள்ளார்.

கோவில் மூலம் கிடைத்த வருமானம் பாதிக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த மருது தனது கூட்டாளியுடன் சென்று ராசாத்தியை அரிவாளால் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தலையை எடுத்துக் கொண்டு தப்பியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மருதுவை பிடித்து விசாரித்து வரும் காவல்துறையினர் கொலைக்கு உடந்தையாக இருந்த கூட்டாளியை தேடி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers