திருமணம் முடிந்த 2 வாரத்திலே காதல் மனைவி முன் பரிதாபமாக பலியான கணவன்: சோக சம்பவம்

Report Print Vijay Amburore in இந்தியா

நெல்லை மாவட்டத்தில் காதல் திருமணம் முடிந்த 2 வாரத்தில் விபத்தில் சிக்கிய கணவன், மனைவியின் கண்முன்னே பரிதாபமாக பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டத்தை சேர்ந்த மாசானமுத்து என்பவரின் மகன் தினேஷ்குமார் (28). இவரும் அதே பகுதியை சேர்ந்த பவித்ரா (21) என்கிற பெண்ணும் கடந்த 3 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.

ஆனால் இதற்கு பெண் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இறுதியில் ஒருவழியாக வீட்டார் சம்மதம் பெற்று இருவரும் 2 வாரங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர்.

இந்த நிலையில் முதல் காதலர் தினத்தை கொண்டாடும் விதமாக இருவரும் சேர்ந்து இரவு சினிமாவிற்கு சென்றுள்ளனர்.

படம் முடிந்து நள்ளிரவில் வீடு திரும்பி கொண்டிருந்த போது, ஆம்புலன்ஸ் ஒன்று வேகமாக சாலையில் வந்துள்ளது. அதற்கு முன்பே சாலையை கடந்து விடலாம் என தினேஷ் குமார், இருசக்கர வாகனத்தை செலுத்தியுள்ளார்.

அப்போது துரதிஷ்டவசமாக வாகனம் ஆம்புலன்ஸ் மீது மோதி விபத்தில் சிக்கியுள்ளனர். இதனை பார்த்த பொலிஸார் உடனடியாக இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தலையில் பலத்த காயமடைந்த தினேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில மணிநேரங்களிலே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தற்போது பலத்த காயங்களுடன் அவருடைய மனைவி, பவித்ரா தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் சொகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...