தமிழகம் வந்தது வீரமரணம் அடைந்த வீரர்களின் உடல்கள்- முப்படை அதிகாரிகள், உறவினர்கள் அஞ்சலி! நேரலை காட்சிகள்

Report Print Fathima Fathima in இந்தியா

காஷ்மீர் தாக்குதலில் வீர மரணம் அடைந்த தமிழக வீரர்களின் உடல்கள் அஞ்சலிக்காக திருச்சி விமான நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது.

புல்வாமா மாவட்டத்தில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பில் நடத்திய தாக்குதலில் 45 பாதுகாப்பு படை வீரர்கள் பலியாகினர்.

இதில் தமிழகத்ததை சேர்ந்த சுப்பிரமணியன் மற்றும் சிவசந்திரனும் ஆவர், இத்தாக்குதலால் ஒட்டுமொத்த இந்தியாவே சோகத்தில் மூழ்கியுள்ளது.

இந்நிலையில் இருவரின் உடல்கள் விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது, தொடர்ந்து சொந்த கிராமத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.

இதனை தொடர்ந்து முப்படை அதிகாரிகள் வீரவணக்கம் செலுத்தினர், உறவினர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers