என் மகனை அடக்கம் செய்யக்கூட இடமில்லை.. கண்ணீருடன் வயதான பெற்றோர்! நெஞ்சை பிசையும் சம்பவம்

Report Print Fathima Fathima in இந்தியா

விருப்ப ஓய்வு பெற்று வயதான பெற்றோரை அருகில் இருந்து கவனித்துக் கொள்ள திட்டமிட்டிருந்த வீரரான குருவும் பயங்கரவாத தாக்குதலில் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புல்வாமாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 45 பாதுகாப்பு படை வீரர்கள் பலியாகினர், நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவத்தில் கர்நாடகாவின் மத்தூர் அருகே குடிகிரி கிராமத்தை சேர்ந்த குரு என்ற வீரரும் ஒருவர்.

இவரது பெற்றோர் கொன்னையா- சிக்கோலம்மா, இரண்டு தம்பிகள். சலவை தொழில் செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர்.

பொருளாதாரத்தில் பின்தங்கியிருந்ததால் பெற்றோரை காப்பாற்ற கடந்த 2011ம் ஆண்டு இந்த பணியில் சேர்ந்துள்ளார்.

கடந்த 10 நாட்களுக்கு முன் சொந்த கிராமத்துக்கு வந்த குரு குடும்பத்துடன் மகிழ்ச்சியாக பொழுதை கழித்துள்ளார்.

விடுமுறை முடிந்து பணிக்கு திரும்பிய நாளே கடைசி நாளாக இருக்கும் என நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார், ஆம், பணிக்கு திரும்பிய நாளிலேயே பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.

இவரது ஆசையை விருப்ப ஓய்வு பெற்று வந்து வயதான பெற்றோரை நன்றாக கவனிப்பது தானாம், சமீபத்தில் சொந்த வீடு கட்டிய குருவுக்கு 10 மாதங்களுக்கு முன்பு கலாவதி என்ற பெண்ணுடன் திருமணமும் நடந்ததாக கதறுகின்றனர் சொந்த பந்தங்கள்.

இதில் மிகவும் சோகமான விடயம் இவரை உடலை அடக்கம் செய்ய சொந்தமாக நிலம் கூட கிடையாது என்பதே.

எனவே அரசே தானாக முன்வந்து நிலத்தை ஒதுக்கியுள்ளனர், அத்துடன் குருவின் மனைவிக்கு அரசு வேலை வழங்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்