திருமண நிகழ்ச்சியை ரத்து செய்த புதுமண தம்பதி: வீர மரணமடைந்த வீரர்களுக்கு லட்சக்கணக்கில் உதவி..குவியும் பாராட்டு

Report Print Raju Raju in இந்தியா

திருமண வரவேற்பு நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு அதற்காகும் செலவுடன் சிறிது பணத்தை சேர்த்து ரூ. 11 லட்சத்தை வழங்க சூரத் தம்பதி முன்வந்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் பகுதிக்கு துணை ராணுவப்படையைச் சேர்ந்த வீரர்கள் சென்ற நிலையில், ஜெய்ஷ் இ முகமது அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி துணை ராணுவப்படை வீரர்களின் வாகனத்தில் மீது மோதி வெடிக்கச் செய்தார். இதில், 45 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

இந்நிலையில் குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்தவர்கள் ஹஸ்முக்பாய் சேத் மற்றும் அஜய் சங்வி. வைர வியாபாரிகள். இவர்களது மகன், மகளுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

அத்துடன் 15-ஆம் திகதியான நேற்று திருமண வரவேற்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் ராணுவ வீரர்கள் மரணமடைந்த செய்தியை கேட்ட இக்குடும்பத்தினர் திருமணத்தை எளிமையாக நடத்த முடிவு செய்தனர்.

அதன்படி திருமண வரவேற்பை ரத்து செய்ததோடு அனைத்து சம்பிரதாயங்களையும் ரத்து செய்துவிட்டனர். மேலும் சமையல், அலங்காரம் உள்ளிட்டவற்றுக்காக ரூ. 5 லட்சம் பேசப்பட்ட நிலையில் மணமக்கள் வீட்டார் மேலும் ரூ. 6 லட்சத்தை சேர்ந்து ரூ. 11 லட்சமாக உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு வழங்க முன் வந்துள்ளனர்.

சூரத் குடும்பத்தின் இந்த மனிதநேய செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers