கணவரிடம் செல்போனில் பேசிக்கொண்டிருந்தேன்... அப்போது...! சம்பவம் குறித்து விவரிக்கும் வீரரின் மனைவி

Report Print Vijay Amburore in இந்தியா

புல்வாமா மாவட்டத்தில் தற்கொலை படையினர் நடத்திய தாக்குதலின் போது கணவருடன் செல்போனில் பேசிக்கொண்டிருந்த பெண் ஒருவர், சம்பவம் குறித்து கண்ணீருடன் விளக்கியுள்ளார்.

காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ம் திகதி அன்று, ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த அடில் அகமது என்னும் நபர் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 44 இந்திய துணை ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.

இந்த சம்பவத்தின் போது உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த பிரதீப் சிங் யாதவ் என்கிற ராணுவ வீரர் தன்னுடைய மனைவி நீராஜ் தேவியிடம் செல்போனில் பேசிக்கொண்டிருந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து பேசிய அவர், சம்பவம் நடைபெற்ற அன்று நான் என்னுடைய கணவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது திடீரென ஒரு பயங்கரமான சத்தம் கேட்டது. அதன் பிறகு எந்த சத்தமும் இல்லாமல் சிறிது நேரம் அமைதியாக இருந்தது.

அதனை தொடர்ந்து என்னுடைய செல்போன் லைன் துண்டிக்கப்பட்டுவிட்டது. ஏதோ ஒரு அசம்பாவிதம் நடைபெற்றுவிட்டது என்பதை புரிந்துகொண்ட நான், பலமுறை தொடர்ந்து முயற்சி செய்துகொண்டே இருந்தேன்.

ஆனால் எந்த பதிலும் வரவில்லை. அப்பொழுது உயர் அதிகாரிகளின் அலுவலகத்தில் இருந்து எனக்கு போன் வந்தது. என்னுடைய கணவர் தற்கொலை படை தாக்குதலில் இறந்துவிட்டதாக அவர்கள் கூறினார்கள் என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தில் வீர மரணம் அடைந்த பிரதீப் சிங்கிற்கு 10 வயதில் சுப்ரியா என்கிற மகளும், 2 வயதில் சோனா என்கிற மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers