தனது ஆபாச புகைப்படங்கள், வீடியோக்களை ஆணுக்கு தொடர்ந்து அனுப்பிய இளம்பெண்: அதிர்ச்சி பின்னணி

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் கடனை திருப்பி கேட்டவருக்கு தனது ஆபாச புகைப்படங்களையும், வீடியோக்களையும் அனுப்பியதாக இளம்பெண் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தை சேர்ந்த பழனிவாசகம் என்பவருக்கும், உச்சிப்புளி அருகே சூரன்காட்டு வலசையைச் சேர்ந்த பிரீத்தி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

அப்போது பிரீத்தி தன்னிடம் இரண்டரை லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கியதாகவும், ஆனால் கடனை திருப்பிக் கேட்ட போதெல்லாம் தன்னுடைய ஆபாச புகைப்படங்களையும், குளிப்பது, உடை மாற்றுவது போன்ற வீடியோக்களையும் பிரீத்தி அனுப்பி வைத்ததாகவும் மண்டபம் பொலிசில் பழனிவாசகம் புகார் அளித்தார்.

இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்ற நிலையில் அந்தப் பெண் மீது தற்போது பொலிசார் மோசடி பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்