இந்தியாவில் 48 மணிநேரத்தில் மீண்டும் குண்டுவெடிப்பு சம்பவம்: ராணுவ மேஜர் உயிரிழப்பு

Report Print Vijay Amburore in இந்தியா

காஷ்மீர் மாநிலம் ரஜோரி பகுதியில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் ராணுவ மேஜர் பலியாகியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ம் திகதி அன்று, ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த அடில் அகமது என்னும் நபர் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40 இந்திய துணை ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.

இந்த சம்பவமானது இந்தியா முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அடுத்த 48 மணி நேரத்திலே மீண்டும் ஒரு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.

இதுகுறித்து லெப்டினன்ட் கர்னல் ஆனந்த் கூறுகையில், இன்று மதியம் 3 மணிக்கு ராணுவ மேஜர், வீரர் ஒருவருடன் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்துள்ளார்.

ராஜோவ்ரியின் நொவ்ஷேரா பிரிவின் லாம் பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது, அழுக்கு படிந்த பாதையில் புதிதாக நிலம் தோண்டப்பட்டிருப்பதை பார்த்து, சந்தேகத்தின் பேரில் சோதனை மேற்கொண்டுள்ளார்.

அப்போது உள்ளே புதைத்து வைக்கப்பட்டிருந்த கன்னி வெடி திடீரென வெடித்து சிதறியுள்ளது. இதில் மேஜர் சம்பவ இடத்திலேயே பலியானதோடு, ராணுவ வீரர் படுகாயமடைந்துள்ளார் என தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே 40 வீரர்கள் தற்கொலைப்படை தாக்குதலில் பலியாகியிருக்கும் நிலையில், மீண்டும் ஒரு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers