சொந்த வயல் நிலத்தில் விதைக்கப்பட்டார் தமிழக வீரர் சுப்பிரமணியன்: 21 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை

Report Print Deepthi Deepthi in இந்தியா

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த இரண்டு தமிழக வீரர்களின் உடல்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு எடுத்து செல்லப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்க வைக்கப்பட்டு குடும்பத்தார் மற்றும் அதிகாரிகள் அஞ்சலி செலுத்திய பின்னர் 21 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது.

சிவசந்திரன் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின் 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

சிவசந்திரன் உடலுக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மரியாதை செலுத்தினார்.

அதன் பின்னர், தூத்துக்குடியின் சவலப்பேரியில் சுப்பிரமணியனின் உடல் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்ட பிறகு 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

சுப்பிரமணியனின் உடலில் அவரது சொந்த வயல் நிலத்தில் விதைக்கப்பட்டது. விவசாய குடும்பத்தை சேர்ந்த சுப்பிரமணியன், விடுமுறையில் வீட்டுக்கு வரும்போது தங்களது சொந்த வயலில் விவசாயம் செய்வார்.

தற்போது அவரது சொந்த வயல் நிலத்தில் அவரது உடல் விதைக்கப்பட்டது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers