தீவிரவாதிகளால் தமிழர்கள் உட்பட இறந்த வீரர்களுக்கு நடிகர் அமிதாப்பச்சன் செய்யப்போகும் உதவி! குவியும் பாராட்டுகள்

Report Print Santhan in இந்தியா

இந்தியாவில் நடந்த தீவிரவாத தாக்குதலி பரிதாபமாக உயிரிழந்த இராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு தல ஐந்து லட்சம் ரூபாய் வழங்கப்போவதாக நடிகர் அமிதாப்பச்சன் தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகள் நடத்திய பயங்கரவாத தாக்குதலில் தற்போது வரை 45 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

இதில் காயமடைந்த சிலர் மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவையே கண்ணீர் சிந்த வைத்த இந்த சம்பவத்திற்கு, திரைப்பிரபலங்கள் பலரும் தங்களால் இயன்ற உதவியை இறந்த இராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு செய்து வருகின்றனர்.

அந்த வகையில் பிரபல காமெடி நடிகர் ரோபோ சங்கர் 1 லட்சம் தருவதாக அறிவித்த நிலையில், உயிரிழந்த வீரர்களின் அனைத்து குடும்பத்தினருக்கும் 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று அமிதாப்பச்சன் தெரிவித்துள்ளார்.

இந்த தொகையை சம்பந்தப்பட்டவர்களிடம் விரைவாக வழங்குவது குறித்து பல்வேறு மாநிலங்களின் அரசு வட்டாரங்களிடம் அவர் ஆலோசனை நடத்தி வருகிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முன்னதாக, கிரிக்கெட் வீரர் கோஹ்லியின் அறக்கட்டளை நிகழ்ச்சியில் அமிபாத் பச்சன் கடந்த வியாழக்கிழமை கலந்து கொள்ள இருந்தார். ஆனால், தீவிரவாதிகளின் தாக்குதல் தொடர்பான செய்தி குறித்து அறிந்ததும் அந்த நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு வீடு திரும்பினார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்