பாராளுமன்ற தேர்தலில் மக்கள் யாருக்கு ஓட்டு போட வேண்டும்? என்னுடைய ஆதரவு யாருக்கு? நடிகர் ரஜினி அதிரடி அறிவிப்பு

Report Print Santhan in இந்தியா

பிரபல திரைப்பட நடிகர் ரஜினிகாந்த வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று அறிவித்துள்ளார்.

இந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் வரவிருக்கும் நிலையில், அரசியல் கட்சிகள் யாருடன் கூட்டணி வைப்பது என்பது குறித்து தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகின்றன.

அந்த வகையில் நடிகர் ரஜினி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவாரா? அவரின் ஆதரவு யாருக்கு இருக்கும் என்று பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

அதைத் தொடர்ந்து இன்று ரஜினிமக்கள் மன்றத்தின் சார்பாக ஆலோசனை கூட்டமும் நடைபெற்றது. ஆலோசனை கூட்டம் முடிந்த பின்னர் ரஜினி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் நான் வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதில்லை எனவும், தமிழக சட்டமன்றத் தேர்தல் தான் எங்கள் இலக்கு என்று கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்