மீண்டும் குண்டுவெடிப்பு சம்பவம்! உயிரிழந்த மேஜரின் புகைப்படம் வெளியீடு.. அடுத்த மாதம் திருமணம் என்ற நிலையில் நிகழ்ந்த சோகம்

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவின் காஷ்மீரில் நிகழ்ந்த கன்னி வெடிகுண்டு வெடிப்பில் ராணுவ மேஜர் உயிரிழந்த நிலையில் அவர் குறித்த உருக்கமான தகவல்கள் வெளியாகியுள்ளது.

காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ம் திகதி, ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதி அடில் அகமது நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 45 இந்திய துணை ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.

இந்த சம்பவமானது இந்தியா முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அடுத்த 48 மணி நேரத்திலே மீண்டும் ஒரு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது.

அதாவது, ஜம்மு காஷ்மீரின் Rajouri மாவட்டத்தில் சித்ரேஷ் சிங் பிஸ்ட் (31) என்ற ராணுவ மேஜர் தலைமையில் வீரர்கள் அந்த பகுதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கன்னி வெடிகுண்டுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது ஒரு கன்னிவெடிகுண்டை சித்ரேஷ் அப்புறப்படுத்தினர்.

அடுத்த குண்டை அப்புறப்படுத்திய போது எதிர்பாராதவிதமாக வெடித்தது.

இதில் படுகாயமடைந்த சித்ரேஷ் அங்கேயே உயிரிழந்தார். இந்நிலையில் சித்ரேஷ் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தின் டெராடூனை சேர்ந்த சித்ரேஷுக்கு அடுத்த மாதம் திருமண நடக்கவிருந்த நிலையிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

சித்ரேஷ் குறித்து செய்தி தொடர்பாளர் கூறுகையில், மேஜர் சித்ரேஷ் ஒரு துணிச்சலான மற்றும் நேர்மையான வீரராக திகழ்ந்தார்.

இந்திய தேசம் அவருக்கு எப்போதும் நன்றி கடன் பட்டிருக்கும் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்