கசிந்த ரகசியம்! கர்ப்பிணி மனைவியை துடிதுடிக்க கொன்ற கணவன்.. திடுக்கிடும் பின்னணி

Report Print Raju Raju in இந்தியா
394Shares

கணவனுக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருப்பதை கண்டுப்பிடித்த கர்ப்பிணி மனைவியை கணவன் கொடூரமாக கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் தீபக் பாண்டியன். இவருக்கும் மகாலட்சுமி என்ற பெண்ணுக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. மகாலட்சுமி 8 மாதம் கர்ப்பிணியாக இருந்தார்.

இந்நிலையில் திடீரென மகாலட்சுமி மர்மமான முறையில் தூக்கில் தொங்கியுள்ளார். யாருக்கும் தெரியாமல் அவரது உடலை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார் கணவர் தீபக் பாண்டியன்.

அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மகாலட்சுமி ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர்.

இதுகுறித்து பொலிசார் வழக்கு பதிந்து விசாரணையைத் தொடங்கினர். அவர்களிடம் மகாலட்சுமி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறியுள்ளார் தீபக் பாண்டியன்.

ஆனால் மகாலட்சுமியை தீபக் பாண்டியன்தான் அடித்துக் கொலை செய்துவிட்டார் எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் மகாலட்சுமியின் உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

தீபக் பாண்டியனுக்கு குடிப்பழக்கம் இருந்ததாகவும் எனவே அவர் மகாலட்சுமியை தினமும் அடித்துக் கொடுமைப்படுத்தியதாகவும் உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுஒருபுறமிருக்க தீபக் பாண்டியனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தவறான தொடர்பு இருந்ததாகக் கூறப்படுகிறது. அதனை கண்டுப்பிடித்த மகாலட்சுமி தட்டிக் கேட்டுள்ளார். இதனாலும் ஆத்திரமடைந்த தீபக் பாண்டியன் மகாலட்சுமியை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து பொலிசார் இந்த சம்பவத்தில் தங்களது விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்