இந்திய எல்லையை 72 மணி நேரம் தனி ஒருவனாக காத்த மாவீரன் ஜஸ்வந்த்! சீனாவையே கதிகலங்க வைத்த சம்பவம்

Report Print Santhan in இந்தியா

இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இருக்கும் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதி நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 45 பேர் பலியாகியுள்ள நிலையில், இந்திய எல்லையை தனி ஒருவனாக காத்த நபரை பற்றி தெரியுமா? சினாவே அவருக்கு சிலை வைத்த கெளரவித்த சம்பவத்தை பற்றி பார்ப்போம்.

கடந்த 1962-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15-ஆம் திகதி, இந்தோ - சீனப் போர் முடியும் தருணம். இந்திய இராணுவம் தொழில்நுட்ப ரீதியாகவும், மனதளவிலும் நம்பிக்கையை கைவிட்ட நேரம்.

இதனால் இந்திய அரசு தன்னுடைய படைகளை திரும்ப அழைத்துக் கொண்டிருந்தது. இதனால் இந்திய இராணுவ வீரர்கள், தேசத்தின் தோல்வியை ஏற்று கொள்ள முடியாமல் மிகுந்த சோகத்தில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது தான் Garhwal Riflesபடைப் பிரிவைச் சேர்ந்த ஜஸ்வந்த் சிங் ராவத், திரிலோக் சிங் நேகி, கோபால் சிங் ஆகிய மூவரும் மற்ற ராணுவ வீரர்களுக்கு மாறாக முடிவெடுத்தனர்.

ஜஸ்வந்த் சிங் ராவத், அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் பகுதியில் இருக்கிறது. மற்ற வீரர்கள் சோர்ந்தாலும் சீன ராணுவத்தினர்களின் மீது, தன் தாக்குதலைத் அவர் தொடர்ந்து கொண்டிருந்தார்.

அப்போது அவருக்கு வயது 21. அவரோடு, திரிலோக் சிங் நேகி, கோபால் சிங் போன்றவர்களும் போராடிக் கொண்டிருந்தனர்.

அப்போதே சீனா மீடியம் மிஷின் கன் ரக துப்பாக்கிகள்,பீரங்கி ரக துப்பாக்கிகள், மார்டர் ரக துப்பாக்கிகளை வைத்து சாதரணமாக முன்னேறி வந்து கொண்டிருந்தது.

ஆனால் ஜஸ்வந்த், கோபால் மற்றும் திரிலோக்கிடம் வெறும் லைட் மிஷின் கன் ரக துப்பாக்கிகள் மட்டுமே, இதை சீனா தனக்கு சாதமாக்கிக் கொண்டதை அவர்களால் ஏற்று கொள்ள முடியவில்லை.

இதனால் இதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்த போது, அவர்கள் ஒரு அதிரடி முடிவை எடுத்தனர்.

அதாவது, சீன ராணுவத்திடமிருக்கும் மீடியம் மிஷின் கன்ரக துப்பாக்கிகளை கைப்பற்றி அவர்களையே தாக்கலாம் என்று முடிவு செய்தனர்.

அதன் படி ஜஸ்வந்தும், கோபாலினும் சீன இராணுவத்தினர் அருகில் கூட வராத முடியாதபடி தோட்டாக்களைத் தெறிக்கவிட்டார்.

இதை வைத்து ஜஸ்வந்தும், கோபாலும் கையில் கிடைத்த ஹேண்ட் க்ரேனைட்கள், எம்.எம்.ஜி ரக துப்பாக்கிகளை எல்லாம் எடுத்துக் கொண்டு, பின் புறமாக முதுகினாலாயே தவழ்ந்து இந்திய எல்லைகளுக்குள் வந்தார்கள்.

இவர்கள் இந்திய எல்லையை கடப்பதற்கும், சீனர்கள் சாய்ப்பதற்கும் சரியாக இருந்தது. அவர்கள் சாய்ந்து விழுவதற்குள் அடுத்தடுத்த குண்டுகள் கோபால் சிங்கை துளைத்தது, அதோடு ஜஸ்வந்தையும் சில குண்டுகள் பதம் பார்த்தன.

அதன் பின் ஒற்றை ஆளாக இருந்த ஜஸ்வந்த் சிங் ராவத் என்ன செய்வது என்று யோசித்து கொண்டு இந்தோ - சீனத்தின் எல்லைப் பகுதியை காக்கிறார்.

இரவு நேரம் என்பதால், சீனர்களும் போரை நிறுத்தியுள்ளனர். இந்த நேரத்தை சாதகமாக்கி கொள்ளம் முடிவு செய்த ஜஸ்வந்த நாம் ஒரு ஆளாக போர் நடத்தினால், அது சாத்தியமில்லை என்று நம்பி, சிறிய உதவிகளுக்கு ஆட்கள் தேவை என்று கிராமத்திற்குள் சென்று உதவி கேட்க, அங்கு நுரா மற்றும் சிலா என்று இரண்டு பெண்கள் உதவிக்கு வருகிறார்கள்.

அவர்களிடம் தன்னுடைய வியூகத்தை ஜஸ்வந்த் கூறுகிறார். அதன் பல பதுங்கு குழிகளில் துப்பாக்கிகளை பொருத்துகிறார்.

அதிகாலை ஆனவுடன், சீனர்கள் மீண்டும் தாக்குதலை நடத்த, இதற்குத்தான் காத்து கொண்டிருந்தேன் என்பது போல் ஜஸ்வந்த் தன்னுடைய துப்பாக்கி குண்டுகளால் சீனர்களை கதறவிடுகிறார்.

சுமார் 72 மணி நேரம் உணவு, தூக்கும் இல்லாமல் காக்கிறார். இதனால் சீனர்களுக்கு முதல் 8 மணி நேரத்திலே குழப்பம் நீடிக்கிறது.

பதுங்கிய இந்தியா இன்று எப்படி இப்படி ஒரு தாக்குதல் என்று சீனா யோசிக்க? உடனே

இந்திய ராணுவம், தன் படையில் பெரும்பகுதியை அனுப்பி தங்களை தாக்குவதாக சீனர்கள் முடிவுக்கு வந்தனர்.

சுமார் 72 மணி நேர முடிவில் 300 சீன ராணுவத்தினர் உயிர் பிரிந்திருந்தது. வெறுப்பின் உச்சத்தில் இருந்த சீனர்களின் கையில், ஜஸ்வந்த் சிங்குக்கு உணவுப் பொருட்களை கொண்டு வரும், கிராமவாசி பிடிபட, அதே ராணுவ முறையில் விசாரணை நடக்கிறது.

அப்போது ரகசியம் உடைகிறது. ஜஸ்வந்தின் வியூகத்தை புரிந்து கொண்டு சீனர்கள் ஜஸ்வந்தை சூழ்கிறார்கள்.

சூழ்நிலையை புரிந்து கொண்ட ஜஸ்வந்த், தன் கையால் சுட்டு இறந்துவிடுகிறார்.ஜஸ்வந்துக்கு உதவிய செலா ஒரு க்ரானைட் தாக்குதலால் கொல்லப்பட்டார். நுரா சீன ராணுவத்திடம் உயிருடன் பிடிபட்டார்.

இருப்பினும் அவர்களுக்கு வெறி அடங்காத காரணத்தினால் ஜஸ்வந்தின் தலையைத் துண்டித்தனர்.

போர் நிறுத்த ஒப்பந்தங்கள் வெளியான பிறகு சீன ராணுவ அதிகாரிக்கு விஷயம் தெரியவர, ஜஸ்வந்தை நினைத்துப் பெருமைப்படுகிறார்.

அவரை கெளரவிக்கும் விதமாக ஜஸ்வந்தின் வெண்கல் சிலையை அவர் காவல் காத்த நூர்னாங்கில் சீனர்கள் நிறுவினார்கள்.

இன்று அந்த இடம் ஜஸ்வந்த் கர் என்று அழைக்கப்படுகிறது. சீன போர் முடிந்த பின், கோபால் சிங் மற்றும் திரிலோக் சிங் நேகிக்கு வீர் சக்ரா விருதும், ஜஸ்வந்த் சிங் ராவத்துக்கு மஹா வீர் சக்ரா விருதும், பதக்கமும் வழங்கி இந்திய அரசு வழங்கி கெளரவித்தது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்